Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024 மிதுனம் :  ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024 மிதுனம் : ஆங்கில புத்தாண்டு ராசி ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024
ரிஷபம் : ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024
எழுத்தின் அளவு:
ரிஷபம் :  ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024

பதிவு செய்த நாள்

31 டிச
2023
12:12

கார்த்திகை; உழைப்பால் உயர்வு

சூரியனின் நட்சத்திரத்தில் பிறந்தாலும் 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசிநாதனாகவும், 2,3,4 ம் பாதத்தினருக்கு சந்திரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

ஆங்கில ஆண்டான 2024, கார்த்திகை 1ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகத்தை வழங்கும்.  முயற்சியில் வெற்றி தரும். செல்வாக்கு உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு புதிய தொழில் தொடங்கும் யோகம், பணியில் முன்னேற்றம், வேலை வாய்ப்பை உண்டாக்கும். உழைப்பால் உயர்வு காண்பீர்கள்.

சனி சஞ்சாரம்
கார்த்திகை 1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதியும், 2,3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதியுமான சனி பகவான் ஆண்டு முழுவதும் யோகப் பலன்கள் தருவார். தொழில் உத்தியோகத்தில் விருப்பம் நிறைவேறும். வருவாய் அதிகரிக்கும். பொருளாதார பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பார். வழக்கமான செயல்களில் முன்னேற்றத்தை உண்டாக்குவார்.

ராகு - கேது சஞ்சாரம்
1 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு கேதுவால் விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். வழக்கு வெற்றியாகும். எதிர்ப்பு விலகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகுவால் வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, வரை 1 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு 12ம் இடத்திலும், மே 1 முதல் 1ம் பாதத்தினருக்கு 2ம் வீட்டிலும், 2,3,4ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசியிலும் சஞ்சரிக்கும் குரு 1ம் பாதத்தினருக்கு ஏப்.30 வரை பொருளாதார நிலையில் முன்னேற்றம் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிப்பார். 2,3,4 ம் பாதத்தினருக்கு மே 1 முதல் யோகத்தை உண்டாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். சமூகத்தில் அந்தஸ்தை உயர்த்துவார்.

சூரிய சஞ்சாரம்
கார்த்திகை 1 ம் பாதத்தினருக்கு ஜன 15 -  மார்ச் 13, ஜூன் 15 - ஜூலை 16, செப் 17 - அக் 17 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு பிப் 13 - ஏப் 13. ஜூலை 17 - ஆக 16. அக்18 - நவ 15 காலங்களிலும் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வழக்குகளில் இருந்து விடுதலை உண்டாக்குவார். செல்வாக்கை உயர்த்துவார். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகளை, பதவியை வழங்குவார். அரசு பணியாளர்களின் மதிப்பை அதிகரிப்பார். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலக்குவார். உடல்நிலையில் ஆரோக்கியம் ஏற்படுத்துவார். அரசால் ஏற்பட்ட நெருக்கடி மறையும்.

பொதுப்பலன்
சங்கடங்கள் விலகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். அறிவாற்றல் அதிகரிக்கும். அரசு வழியில் சலுகை கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த உதவிகள் சரியான நேரத்தில் வரும். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வெளிநாட்டிற்கு செல்ல நினைத்தவர்களின் முயற்சி வெற்றியாகும்.

தொழில்
தடைகள் விலகும். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். முயற்சிகள் எளிதாக வெற்றியாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் முன்னேற்றம் அடையும். இண்டஸ்ட்ரியல், ஹார்டுவேர்ஸ், ஸ்டேஷனரி, கம்ப்யூட்டர் வணிகம், சினிமா, பங்கு வர்த்தகம் கை கொடுக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

பணியாளர்கள்
பணிபுரியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு உண்டாகும். இக்காலத்தில் மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதால் நன்மை அதிகரிக்கும்.

பெண்கள்
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களின் செல்வாக்கு உயரும். சுயதொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் ஏற்படும். சிலருக்கு திருமண பாக்கியம் உண்டாகும். கணவன், மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

கல்வி
படிப்பில் முழு கவனத்தை செலுத்துவதால் எதிர்ப்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். சிலருக்கு வெளிநாட்டிற்கு சென்று கல்வி கற்கும் வாய்ப்புண்டாகும்.

உடல்நிலை

நீண்ட நாள் நோய்கள் மருத்துவ சிகிச்சையால் குணமாகும். நடமாட்டத்தில் இருந்த பாதிப்பு நீங்கும். சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய அளவிற்கு உடல்நிலை ஆரோக்கியமடையும்.

குடும்பம்
திட்டமிட்டு செயல்படுவீர்கள். தம்பதி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொத்து சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்கள்.

பரிகாரம்

ஆலங்குடி குரு பகவானை வணங்க வாழ்க்கை வளமாகும்.


ரோகிணி; வியாபார வளர்ச்சி

சந்திரன், சுக்கிர பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 வருடத்தில் நீங்கள் செய்யும் தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பார்த்து வரும் பணியில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். வருமானம் பல வழிகளிலும் வரும். வெளிநாட்டு வர்த்தகம் ஆதாயம் தரும். முதலீட்டாளர்களுக்கு பணியாளர் ஒத்துழைப்பு உண்டாகும். மாற்று மொழியினர், இனத்தினரால் எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் தேடிவரும். அவ்வப்போது உடல் பாதிப்பு தோன்றும். செலவுகள் பல வகையிலும் ஏற்படும்.

சனி சஞ்சாரம்
 சனி ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றம். உத்தியோகத்தில் உயர்வு, செல்வாக்கு, அந்தஸ்து என்று உண்டாவதுடன், உடல்நிலையில் முன்னேற்றம். வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமை. விரயச் செலவுகள் தவிர்ப்பு என நிம்மதியான நிலை ஏற்படும்.

ராகு - கேது சஞ்சாரம்
ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் ராகுவால் வாழ்க்கை வளமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் பல வழியிலும் வரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். உயர்ந்த பதவி அல்லது பொறுப்பு  வந்து சேரும். குலதெய்வ அருள் உண்டாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடைபெறும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30, வரை விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் குருவின் பார்வைகளால் ஆரோக்கியம் சீராகும். எதிர்ப்பு விலகும். செல்வாக்கு உயரும். மே 1 முதல் உயர் கல்வி எண்ணம் நிறைவேறும். வேலை வாய்ப்பு தேடுவோருக்கு நிரந்தர வேலை அமையும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
பிப் 13 -  ஏப் 13,  ஜூலை 17 - ஆக 16, அக் 18 -  நவ 15 காலங்களில் சூரிய பகவான், தொழிலில் வளர்ச்சியை உண்டாக்குவார். சுப காரியங்களை நடத்தி வைப்பார். தைரியமாக செயல்பட வைப்பார். முயற்சிகளில் வெற்றியை அடையச்செய்வார். செல்வாக்கை உயர்த்துவார். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடங்களுக்கு விடுதலை தருவார்.

பொதுப்பலன்
தொழில் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் விலகுவர். வருமானம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும்.  கவுரவம் மேம்படும். உத்தியோகத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

தொழில்
இதுவரை இருந்த தடை, ஆதாயமற்ற நிலை நீங்கும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இயந்திரத் தொழிற்சாலை, மின்சார சாதனங்கள் தயாரிப்பு, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், சினிமா, விவசாயம், மினரல் வாட்டர் தொழில்களில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.

பணியாளர்கள்
தனியார் துறை பணியாளர்களுக்கு உழைப்பிற்கேற்ற வருமானம் உண்டாகும்.  விரும்பிய இடத்திற்கு இடமாற்றம், கூடுதல் பொறுப்பு ஏற்படும். வழக்கு நடவடிக்கைகளுக்கு ஆளாகி வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும். அதிகாரியின் ஆதரவு உண்டாகும்.

பெண்கள்
வேலைக்காக வெளிநாடு செல்வதற்கு முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சுயதொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். அலுவலகப் பணியில் பொறுப்பும், உழைப்பும் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும்.

கல்வி
படிப்பில் அக்கறை கொள்வதாலும், ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதாலும் எதிர்பார்த்த மதிப்பெண் பெற வழிவகுக்கும். சிலருக்கு மேலை நாட்டிற்கு அல்லது வெளி மாநிலத்தில் கல்வி கற்கும் நிலை ஏற்படும்.

உடல்நிலை
உடல் பாதிப்புகள் மருத்துவத்தால் சரியாகும். அஜீரணக் கோளாறு, அல்சர், வாயுத்தொல்லைகளால் அவதிப்படுவோருக்கு இயற்கை வைத்தியத்தால் குணமுண்டாகும். சிலர் தொற்று நோய்களுக்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் பழக்க வழக்கங்களில் எச்சரிக்கை அவசியம்.

குடும்பம்
தேவைக்கேற்ற வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர்கள்  ஒருவருக்கொருவர் உதவியாக இருந்து செயல்படுவீர்கள். புதிய சொத்து, வாகனச் சேர்க்கை உண்டாகும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலை தேடுவோருக்கு  தகுதியான வேலை அமையும். திருமண வயதினருக்கு திருமணம் நடைபெறும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.

பரிகாரம்; குலதெய்வத்தை வழிபட குறையனைத்தும் தீரும். நன்மை உண்டாகும்.


மிருகசீரிடம்; முயற்சி வெற்றியாகும்

செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு  சந்திரன் ராசி நாதனாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும் உள்ளனர்.
பிறக்கும் 2024 ஆண்டில், மிருகசீரிடம் 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். செயல்பாட்டில் வேகம், விவேகம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புகளில் லாபம் அதிகரிக்கும். 3,4ம்  பாதங்களில் பிறந்தவர்களுக்கு அனைத்திலும் யோகம் என்ற நிலை ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வை வழங்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொட்டதெல்லாம் வெற்றியென்ற நிலையை உண்டாக்கும்.

சனி சஞ்சாரம்
கும்ப ராசியில் சஞ்சரிக்கும் சனி தாரா பலன்களால் 4பாதங்களில் பிறந்தவர்களுக்கும் அதிர்ஷ்டப் பலன்களை அள்ளி வழங்கிடுவார். 1,2ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்தமனம், வக்கிர காலங்களில் முயற்சியில் இருந்த தடைகளை விலக்கி வைப்பார். நினைத்த செயல்களை நினைத்தபடி நடத்தி முடிக்கும் நிலையை உருவாக்குவார். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளை எல்லாம் லாபமாக்குவார். யோகத்தை உண்டாக்குவார். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்துவார்.

ராகு - கேது சஞ்சாரம்
ஆண்டு முழுவதும் ராகு மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் 1,2ம் பாதங்களில்  பிறந்தவர்களுக்கு ராகுவால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும்.  திரைத்துறையினருக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை சாதிக்கும் நிலை உண்டாகும். பணம் பலவழிகளிலும் வரும். 3,4ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலாக செயல்பட்டு இழந்த சொத்து, செல்வாக்கை மீண்டும் அடையும் நிலை ஏற்படும். நீண்டநாள் கனவு நிறைவேறும். எதிர்பாராத ஆதாயம் தோன்றும்.

குரு சஞ்சாரம்
ஏப் 30 வரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செலவுகளை அதிகரித்தாலும் செல்வாக்கை உயர்த்துவார். எதிர்ப்புகளை இல்லாமல் செய்வார்.  விருப்பங்களையும் நிறைவேற்றுவார். 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழில், வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதி உண்டாக்குவார். சுபகாரியங்களை நடத்தி வைப்பார். மே 1, முதல் 1,2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜென்ம குருவாகவும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு விரய குருவாகவும் சஞ்சரிப்பவர் பார்வைகள் வழியே அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்குவார். வியாபாரம், தொழில், உத்தியோகம், குடும்பம் என எல்லாவற்றிலும் முன்னேற்றம் தருவார்.

சூரிய சஞ்சாரம்
மிருகசீரிடம் 1,2 ம் பாதத்தினருக்கு பிப்.13 -  ஏப்.13 வரையிலும், ஜூலை 17 - ஆக 16 வரையிலும்,  அக்.18, - நவ. 15 வரையிலும்,  3,4 ம் பாதத்தினருக்கு மார்ச் 14 - மே 13 காலத்திலும் ஆக. 17 - செப். 16 வரையிலும், நவ.16, - டிச. 15 வரையிலும் உங்கள் வாழ்வில் பிரகாசமான நிலையை உண்டாக்குவார். பிரச்னைகளை விலக்கி வைப்பார். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கை அதிகரிப்பார். பணியாளர்களுக்கு உயர்வை ஏற்படுத்துவார். அரசுவழி முயற்சிகளில் ஆதாயத்தை ஏற்படுத்துவார்.


பொதுப்பலன்
உங்களுக்கு யோகமான ஆண்டாக இருக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். வியாபாரம் விருத்தியாகும். செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் லாபத்தில் செல்லும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி அடைவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு வந்து சேரும். கலைத்துறையினர் செல்வாக்கு பெறும் ஆண்டாக இருக்கும்.

தொழில்
இயந்திர தொழிற்சாலை, ஸ்பேர் பார்ட்ஸ், ஆசிரியர்கள், கலைஞர்கள், அறுவை சிகிச்சை மருத்துவர்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்வோருக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் உண்டாகும்

பணியாளர்கள்
உழைப்பு அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற பலனை அடைவீர்கள். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். மேலதிகாரியின் ஆதரவால் நெருக்கடி நீங்கும்.

பெண்கள்
குடும்பத்தினரை அனுசரித்து விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். திருமண வயதினருக்கு நல்ல செய்தி வரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை அமையும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும் ஊதியம் கூடும்.

கல்வி
பொதுத்தேர்வில் பங்கேற்போர் ஆசிரியர்களின் ஆலோசனைப்படி செயல்படுவது அவசியம். விளையாட்டுத்தனமான செயல்களை ஒதுக்கி விட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துவதால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெற முடியும்.

உடல்நிலை
உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும். விபத்து, நீண்டநாளாக நோய்வாய்ப் பட்டிருந்தவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும். பரம்பரை நோய், தொற்று நோய் பாதிப்புகள் குறையும்.

குடும்பம்
வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். சுப காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்களுடன் ஒற்றுமை உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். நினைத்தவற்றை செய்து முடித்து ஆதாயம் காண முடியும். சிலருக்கு புதிய வாகனம் வீடு  அமையும்.

பரிகாரம்; ராகு கேதுவிற்கு பூஜை செய்து, காளத்தீஸ்வரரை வணங்க நன்மை உண்டாகும்.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024 »
temple news
அசுவினி; நல்லநேரம் ஆரம்பம்செவ்வாய், பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2024 ஆங்கில வருடத்தில் ... மேலும்
 
temple news
அசுவினி: தன்னலம் பாராமல் பிறருக்கு உதவும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த ஆண்டு நீங்கள் ... மேலும்
 
temple news
கார்த்திகை  2, 3, 4: சேமிக்கும் பழக்கம் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு காரியங்களைத் தைரியமாகச் செய்து ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்; முயற்சி வெற்றியாகும்செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2ம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் - 3, 4: புதிய முயற்சிகளில் திட்டமிட்டு வெற்றி பெறும் உங்களுக்கு இந்த ஆண்டு குடும்பத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar