அயோத்தியில் பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்து வருகின்றனர்; அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2024 01:01
அயோத்தி, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், ராமர் ஐந்து வயது பாலகனாய் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இது குறித்து ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா தலைமை அர்ச்சகர், ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறுகையில்; "ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டையில் இருந்து இது நான்காவது நாள். ஜனவரி 22ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய திறக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் பொறுமையாக தரிசனம் செய்கிறார்கள். பொறுமையாகவும் அமைதியாகவும் தரிசனம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது, பக்தர்கள் அதை பின்பற்றுகிறார்கள்..." என்றார்.