பதிவு செய்த நாள்
26
பிப்
2024
11:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் மாசி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு கோயிலில் பிரமாண்டமான திரிசூல ஸ்நானம் நடைப்பெற்றது.
சொர்ணமுகி ஆற்றின் சுற்றுவட்டார பகுதிகளில், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட தீர்த்தம் (தற்காலிக) (குட்டை) கரைக்கு முன்னதாக வர்ணம் பூசப்பட்டு பக்தர்களின் வசதிக்காக எந்த ஒரு சிரமுமின்றி திரிசூல ஸ்நானத்தை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திரிசூலத்தில் (ஞானப் பிரசுனாம்பிகா தேவி சமேத சோமஸ்கந்த மூர்த்தி)விநாயகர் , வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை சண்டிகேஸ்வரர் உற்சவ மூர்த்திகளை கோயிலில் அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மேள தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சொர்ணமுகி ஆற்றங்கரை வரை கொண்டுச் சென்று அங்கு (பிரதிஷ்டை செய்து)ஆகம சாஸ்திரப் படி கோயில் வேதப் பண்டிதர்கள் சத்வோமுக்தி விரதப் பலனை பக்தர்களுக்கு எடுத்துறைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 24ம் தேதி சனிக்கிழமை மாசி மாதப் பௌர்ணமி அன்று ஒவ்வொரு ஆண்டும் சிவன் கோயிலில் த்ரிசூல ஸ்நானம் என்றும் சத்வோமுக்தி விரதம் என்றும் சிறப்பு உற்சாகம் நடைப் பெறுவது வழக்கம்.அதே போல் இன்றும் திரிசூல ஸ்தானத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய முன்னதாக சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.இக்கோயிலில் நடைபெறும் விழாக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.அதிலும் இன்று இந்த விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சொர்ணமுகி ஆற்றில் புனித நீராட இயற்கை சூழலில் அமைக்கப்பட்டது.
மகாசிவராத்திரி பிரம்மோற்சவம் மார்ச் 3-ம் தேதி தொடங்கும் விழாவில் அதிக அளவில் பக்தர்கள் திரளுவார்கள் என்று கருதி தேவஸ்தான அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று சொர்ணமுகி ஆற்றின் கரையில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சத்வோமுக்தி விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்கி சுவாமி அம்மையார்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து சொர்ணமுகி ஆற்றில் புனித நீரில் திரிசூலம் நீராட்டப்பட்டது. இதில் கோயில் வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள், ஸ்ரீ காளஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர் மதுசூதன் ரெட்டி, கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசலு உட்பட ஏராளமான பக்தர்கள் சொர்ண முக்கிய ஆற்றில் புனித நீராடினர்.கடந்த கால அனுபவத்தை கருத்தில் கொண்டு கோயில் பொறியியல் துறை அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். த்ரிசூல ஸ்தானத்திற்கு வரும் பெண் பக்தர்கள் அமைதியாக அமர்ந்து உற்சவத்தை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மஹாசிவராத்திரிக்கு சில நாட்களுக்கு முன்னதாக வரும் மாசி மாதப் பௌர்ணமியின் போது இந்த உற்சவம் நடத்துவது வழக்கம். இதற்கு அதிக முக்கியத்துவம் பக்தர்கள் கொடுக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . திரிசூல ஸ்நானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சொர்ணமுகி ஆற்றில் புனித நீராடி சாமி அம்மையாரை தரிசனம் செய்தனர். தொடர்ந்து சொர்ணமுகி ஆற்றங் கரையிலிருந்து நான்கு மாட வீதிகளில் பஞ்ச மூர்த்திகள் (விநாயகர், வள்ளி தேவயானை சமேத சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மற்றும் சண்டிகேஸ்வரர்) ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் எஸ்.வி.நாகேஸ்வரராவ் துணை செயல் அதிகாரி என்.ஆர்.கிருஷ்ணா ரெட்டி, துணை ஆணையர் மல்லிகார்ஜுன் பிரசாத், செயற் பொறியாளர் நூகரத்தினம்மா அதிகாரிகள் சீனிவாசலு ரெட்டி, தனபால், சூர்யபிரசாத், நாகபூஷன், சம்மந்தம் குருக்கள் கருணா குருக்கள், அர்ச்சகர் அர்த்தகிரி சுவாமி பிரதாப், சூர்ய பிரசாத் பங்கேற்றனர்.