தேவிபட்டினம் நவபாஷாண கோயில் சீரமைப்பு அடிக்கல் நாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2024 11:02
தேவிபட்டினம்; ராமநாதபுரம் அருகே, தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவகிரக திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் பல்வேறு தோஷ நிவர்த்திகள் வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாண நவக்கிரக கடலுக்குள் உள்ள, நடைபாதை மற்றும் சுற்றுச்சுவர் தூண்கள் சேதமடைந்தன. நவபாஷாண கோயில் சீரமைப்பு செய்ய வலியுறுத்தி தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து நவகிரகங்களை சுற்றியுள்ள நடைபாதை ஆர்.சி.தூண்கள், மேற்கூரை அமைத்தல் மற்றும் நடைபாதை தரைத்தளம் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ 57 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில், இந்த பணிக்கான தொடக்க விழாவில், திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்வில், யூனியன் சேர்மன் பிரபாகரன், நவபாஷாண செயல் அலுவலர் நாராயணி, எழுத்தர் தங்கவேல் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.