முத்துமாரியம்மன் கோயிலில் பற்றி எரிந்த தீ உடனடியாக அணைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2024 04:03
ஆண்டிபட்டி; சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று இரவில் பற்றி எரிந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் நேற்று இரவு 8 மணிக்கு பூஜைகளுக்கு பின் மூடப்பட்டது. கருவறை முன்புறம் உள்ள பகுதிக்கு கிரில் கேட் அமைக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. விசேஷ காலங்களில் உற்சவ அம்மனை இப்பகுதியில் வைத்து வழிபாடு செய்வர். நேற்று இரவு 11 மணி அளவில் அப்பகுதியில் இருந்த பொருட்கள், துணிகளில் தீ பற்றி உள்ளது. உடனடியாக இதனைக் கவனித்த கோயில் வளாகத்தில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து விட்டனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது அணையாமல் எரிந்த தீபத்தால் தீப்பற்றியதா என்ற விபரம் தெரியவில்லை கோயில் பணியாளர்கள் தெரிவித்தனர்.