காளஹஸ்தி சிவன் கோயிலில் மகாசிவராத்திரி விழா; சூரிய பிரபையில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மார் 2024 10:03
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் மகாசிவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சூரிய பிரபை வாகனத்திலும், ஞானப் பிரசுனாம்பிகை அம்மையார் சப்பரத்திலும் நான்கு மாட வீதி உலா வந்தனர். பக்தர்கள் சுவாமிக்கு கற்பூர ஆரத்தி எடுத்து பரவசமடைந்தனர்.
இதே போல் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாள் இரவு 9 மணிக்கு பூத வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் சூக (கிளி) வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயாரும் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த ஊர் வலத்தில் விநாயகா,வள்ளி தேவயானை சமேத சுப்ரமணியசுவாமி, பக்தகண்ணப்பருடன் பின்னால் பூத வாகனம் ஏறி, ஜகன்மாதா கிளி வாகனத்திலும் வலம் வந்தனர். நடனக் கலைஞர்களின் கோலாட்டங்கள், பஜனைகள் என ஊர்வலம் கோலாகலமாக நடந்தது.