பதிவு செய்த நாள்
11
மார்
2024
05:03
மூலம்: விஞ்ஞானம், மெய்ஞ்ஞானத்திற்கு காரகனான கேது, தனக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு எப்போதும் கடவுளின் அருள் இருக்கும். உலகைப் புரிந்து கொண்டு வாழும் திறமை இயல்பாகவே இருக்கும். பிறக்கும் பங்குனி மாதம் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்ல வேண்டும். உங்கள் ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து பாக்கிய, லாப, ஸ்தானத்தையும், உங்கள் ஜென்ம ராசியையும் பார்ப்பதால் இந்த மாதம் உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் அடைவீர்கள். வருமானம் பலவழியிலும் வர ஆரம்பிக்கும். செய்து வரும் தொழில், வியாபாரம் போன்றவற்றில் இருந்த தடைகள் விலகி உங்கள் முயற்சிகளில் ஆதாயம் உண்டாகும். இதுவரையில் மற்றவர்களின் பார்வைக்கு சாதாரணமாக தெரிந்த நீங்கள் இனி, கவுரவமானவர்களாக, அந்தஸ்தானவர்களாக, செல்வாக்கு மிக்கவராக தெரிவீர்கள். உங்கள் திறமை வெளிப்படும். நினைத்ததை எல்லாம் உங்களால் சாதித்துக் கொள்ளமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்திருந்த பொறுப்பு வந்துசேரும். சொத்து சேர்க்கை ஏற்படும். பணியாளர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வந்துசேரும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் வாழ்க்கையில் ஏற்றமான நிலை உண்டாகும். திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு வரன் வரும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை உண்டாக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருப்பார். மாணவர்களுக்கு கல்வியில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 21.
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 16,21,25,30, ஏப். 3,7,12
பரிகாரம்: விநாயகரை வணங்கினால் தடைகள் விலகி வெற்றி உண்டாகும்.
பூராடம்: அதிர்ஷ்டக்காரகன், கலைக்காரகன், விநோதனான சுக்கிரன், அந்தஸ்திற்கும் அறிவிற்கும் காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு மற்றவரை வழிநடத்தும் ஆற்றலும், எந்த இடத்திலும் முன்னிலை வகிக்கும் திறனும், யோசித்து செயல்பட்டு வெற்றியடையக்கூடிய சக்தியும் இயல்பாக இருக்கும். பங்குனி மாதத்தில் உங்கள் நட்சத்திர நாதனும், ராசிநாதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் இதுவரையில் இருந்த சங்கடங்கள் எல்லாம் விலக ஆரம்பிக்கும். உங்கள் திறமை வெளிப்படத் தொடங்கும். கடந்த காலத்தில் உண்டான சங்கடங்கள் எல்லாம் நீங்கும். முயற்சி ஸ்தானத்தில் சனி, செவ்வாய் இணைவு உண்டாவதால் இதுநாள் வரையில் தயக்கமுடன் செயல்பட்டு வந்த நீங்கள் வேகமாக இலக்கை நோக்கி செயல்படுவீர்கள். எந்த இடத்தை அடைய வேண்டும் எனக் கனவு கண்டு வந்தீர்களோ அந்த இடத்தை உங்களால் அடைய முடியும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். திருமண வயதினருக்கு நல்ல வரன் அமையும். வியாபாரம், தொழிலில் இருந்த தடைகள் விலகி லாபம் அதிகரிக்கும். தெய்வ அருள் உண்டாகும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்கள். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். சகோதரர்கள், நண்பர்களால் ஆதாய நிலை உண்டாகும். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். பெண்களுக்கு யோக காலமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உயரும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு யோகமான காலமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவர்.
சந்திராஷ்டமம்: மார்ச் 22
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 15, 21, 24, 30. ஏப். 3,6,12
பரிகாரம்: குருபகவானுக்கு முல்லைப்பூ சார்த்தி வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் 1 ம் பாதம் : ஆன்ம காரகன், ஆற்றல் காரகனான சூரியன், ஞானக்காரகன், தனக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு சமயோசித புத்தியும், சாதுரியமும், நினைத்ததை சாதிக்கும் வலிமையும் நிறைந்திருக்கும். முயற்சியில் வெற்றி அடையும்வரை சோர்ந்து போகாமல் செயல்படுவீர்கள். பங்குனி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் நான்காம் இடத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கும் நிலையில், ராசிநாதன் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இதுநாள்வரை தடைப்பட்டு வந்த முயற்சிகள் நிறைவேற ஆரம்பிக்கும். கடந்த காலத்தில் கற்ற அனுபவங்களை வைத்து ஒவ்வொரு செயலிலும் நிதானமாக செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் லாபத்தை ஏற்படுத்தும். பணியாளர்களின் திறமை வெளிப்பட்டு பாராட்டு கிடைக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், சனியின் சஞ்சார நிலையால் சொத்து சேர்க்கையும் தைரியமும் அதிகரிக்கும். முயற்சி யாவும் வெற்றி பெறும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். மக்கள் ஆதரவுடன் நினைத்த இலக்கை அடைவீர்கள். பெண்களுக்கு இந்த மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். புதிய பணியில் சேர முயற்சிப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஏக்கம் பூர்த்தியாகும். விவசாயிகளுக்கு இது யோகமான மாதம். வருமானம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும் பொதுத் தேர்வை தைரியமாக எதிர்கொள்வர்.
சந்திராஷ்டமம்: மார்ச் 23
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 19,21,28,30, ஏப். 1,3,10,12
பரிகாரம்: தினமும் சூரியபகவானை வழிபட சங்கடங்கள் தீரும்.