பதிவு செய்த நாள்
11
மார்
2024
05:03
விசாகம் 4 ம் பாதம்: புத்திக்கும், யுக்திக்கும், பொன்னுக்கும், புகழுக்கும் காரகனான குரு. சக்திக்கும், வலிமைக்கும் காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் இருக்கும். பிறக்கும் பங்குனி மாதம் இதுவரை இருந்த நிலையில் மாற்றம் உண்டாகும். நான்காம் இடமான சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சனி பகவானுடன், ராசிநாதன் இணைவதால் வேலைப்பளு அதிகரிக்கும். முயற்சியில் குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஒரு செயலில் லாபம் என்றால் அடுத்த செயலில் அதற்கு எதிர்மாறான நிலை ஏற்படும் என்பதால் உங்கள் வேலைகளில் முழு கவனத்தையும் செலுத்துவது நல்லது. யோசிக்காமல் எந்தவொரு முயற்சியிலும் ஈடுபட வேண்டாம். முடிந்தவரை புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. உடலிலும் மனதிலும் எதிர்பாராத நெருக்கடி, சலிப்பு, அசதி தோன்றக் கூடும் என்றாலும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பொருளாதார முன்னேற்றத்தை உண்டாக்குவார். வருமானத்தை வழங்குவார். தொழில், வியாபாரத்தில் முயற்சிக்கேற்ற வருமானத்தை வழங்குவார். லாப ஸ்தானத்தின் மீது சூரியன், ராகுவின் பார்வையும் பதிவதால் அரசு வழியில் அனுகூலம், எதிர்பாராத பணவரவு ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பணியாளர்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தவும். விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ப ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டால் நெருக்கடி இருக்காது. பணியாளர்கள் வழக்கம் போல் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். புதிய முயற்சி இந்த மாதத்தில் வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: மார்ச் 18,19
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 21,27,30, ஏப். 3,9,12
பரிகாரம் நவக்கிரகத்திற்கு நல்லெண்ணெய் தீபமேற்ற நன்மை அதிகரிக்கும்.
அனுஷம்: ஆயுள்காரகன், கர்மக்காரகனான சனி, பராக்கிரம காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு தனித்துவமான திறமை இருக்கும். எந்த ஒன்றையும் செய்து முடிக்கும் ஆற்றல் இருக்கும். மற்றவர்களால் முடிக்க முடியாததை நீங்கள் முடித்துக் காட்டுவீர்கள். இந்த மாதம் உங்கள் ராசிநாதனும் நட்சத்திர நாதனும் சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். முயற்சிகளை எந்தளவிற்கு மேற்கொள்கிறீர்களோ அந்தளவிற்கு உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். குருபகவானின் பார்வைகள் ஜீவன ஸ்தானத்திற்கும், குடும்ப ஸ்தானத்திற்கும் உண்டாவதால் தொழிலில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு, சூரியன் இணைவதால் பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னைகள் தோன்றலாம். பொறுமையுடன் செயல்படுங்கள். பிரச்னைகளை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைப்பது நல்லது. வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களின் எண்ணம் நிறைவேறும். அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பணியில் கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில் அதிகாரிகளின் கண்டிப்பிற்கு ஆளாக நேரும். ஆனால் லாப ஸ்தானத்திற்கு சூரியன், ராகுவின் பார்வை உண்டாவதால் சமாளித்து விடுவீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும். பெண்கள் நிதானமாக செயல்படுவது அவசியம். பணிபுரியும் இடத்தில் திறமை அங்கீகரிக்கப்படும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். விவசாயிகள் நெருக்கடிகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். எதிர்பார்த்தது இழுபறியாகும். அரசியல்வாதிகள் முயற்சி தள்ளிப் போகும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: மார்ச் 19, 20
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,18,26,27, ஏப். 8,9
பரிகாரம்: நரசிம்மரை வணங்கினால் சங்கடங்கள் விலகும்.
கேட்டை: கல்விக்காரகனான புதன், சகோதர, ரத்த, யுத்தகாரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எந்த ஒன்றிலும் யோசித்து செயல்படக்கூடிய ஆற்றல் இருக்கும். மற்றவர்கள் எதிர்பார்க்காத செயல்களைச் செய்து வெற்றி அடைவீர்கள். இந்த மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதன் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் விரும்பாத செயலில் ஈடுபட்டு அவப்பெயருக்கு ஆளாக நேரும். என்றாலும் சுக்கிரன் மாதத்தின் பிற்பகுதியில் யோகத்தை வழங்க இருக்கிறார். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வரவுகள் அதிகரிக்கும். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி செவ்வாயால் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, சூரியனால் வெளிநாட்டு தொடர்பு ஆதாயம் தரும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தால் விருப்பம் நிறைவேறும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது எதிர்பார்த்த வரவை உண்டாக்குவதுடன் ஐந்தாம் இடத்தையும் பார்ப்பதால் குலதெய்வ அருள் உண்டாகும். எல்லாவிதமான சங்கடங்களில் இருந்தும் விடுபடுவீர்கள். குருவின் பார்வைகள் தொழில், வியாபாரத்தை விருத்தி செய்யும். குடும்பத்தில் நிம்மதி, பணவரவு உண்டாகும். பணியாளர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் எதிர்பார்ப்பு நிறைவேறும். உழைக்கும் இடத்தில் மதிப்பு உயரும். பெண்கள், பிள்ளைகளின் மீதும் குடும்பத்தின் மீதும் அக்கறை செலுத்துவது நன்மையளிக்கும். வாழ்க்கைத்துணையை ஆலோசித்து எந்தவொரு முடிவும் எடுத்தால் சங்கடம் இல்லாமல் போகும். பண நெருக்கடி விலகும். அரசியல்வாதிகள் சாணக்கியத்தனமாக செயல்பட்டு தலைமையிடம் நற்பெயர் பெறுவர். எதிர்பார்த்த பொறுப்பு வந்து சேரும். விவசாயிகள் பணியில் அக்கறை கொள்வது அவசியம். மாணவர்கள் கூடுதல் கவனமுடன் படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: மார்ச் 20
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 14,18,23,26, ஏப். 5,9
பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.