பதிவு செய்த நாள்
11
மார்
2024
05:03
உத்திராடம் 2,3,4 ம் பாதம்: சர்வ சக்திக்கும் காரகனான சனி, ஆன்ம ஆற்றல் காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு இரண்டு வித சக்தி இருக்கும். ஒரு பக்கம் செயலில் அதிகபட்ச வேகம் இருக்கும். மறுபக்கம் யோசித்து செயல்படும் புத்தி இருக்கும். இந்த மாதம் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் நட்சத்திரநாதனால் சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். அரசால் ஏற்பட்ட நெருக்கடிகள், தடைகள் விலகும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி நிறைவேறும். இடம், தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். பெரியோரின் ஆதரவும் ஆசியும் உண்டாகும். குருபகவானின் பார்வை உங்கள் ஜீவன ஸ்தானத்திற்கு உண்டாவதால் தொழில் விருத்தியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். பணியில் இருந்த சங்கடங்கள் மறையும். உழைப்பவர்களின் நிலை உயரும். அரசு வழியில் நன்மை ஏற்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். பெண்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய வேலை அமையும். சுய தொழில் தொடங்குபவர்களின் நிலை உயரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடங்கள் தீரும். திறமை வெளிப்படும். அரசியல்வாதிகளுக்கு இக்காலம் அதிர்ஷ்டமாக இருக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரிய பகவான் எதிர்பார்த்த பதவியை வழங்குவார். முன்னேற்றத்தை உண்டாக்குவார். விவசாயிகளின் நிலை உயரும். விளைச்சல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கவனம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: மார்ச் 23
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,19,26,28, ஏப்.1,8,10
பரிகாரம்: முருகனை வழிபட முன்னேற்றம் உண்டாகும்.
திருவோணம்: உடலுக்கும், மனதிற்கும் காரகனான சந்திரன். தொழிலுக்கும், கர்ம வினைகளுக்கும், ஆயுளுக்கும் காரகனான சனி பகவான் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, ஒரு பக்கம் உறுதியான மனநிலை இருந்தாலும், மறுபக்கம் குழப்ப நிலையும் இருக்கும். சில நேரங்களில் எதை முன்னால் செய்வது எதை அடுத்து செய்வது என்பதை மறந்து அவசரப்பட்டு சில செயல்களில் ஈடுபட்டு நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அதே நேரத்தில் உங்கள் முயற்சிகளை யாருக்காகவும் நிறுத்த மாட்டீர்கள். உங்கள் இலக்கை அடையும் வரையில் முயற்சித்துக்கொண்டே இருப்பீர்கள். பிறக்கும் பங்குனி மாதம் யோகமான மாதமாக இருக்கப் போகிறது. இதுவரையில் தடைபட்ட முயற்சிகள் யாவும் நிறைவேறப் போகிறது. உங்கள் திட்டங்கள் வெற்றியடையும். சங்கடங்கள் குறைந்து வருமானம் அதிகரிக்கும். புகழும் செல்வாக்கும் உயரப் போகிறது. மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு, சூரியனும் உங்களுக்கிருந்த தடைகளை விலக்குவர். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய வைப்பர். உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். வம்பு வழக்குகளில் இருந்து விடுவிப்பார்கள். வழக்குகள் சாதகமாக மாறும். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதனும், செவ்வாயும் ஒரு பக்கம் வேகத்தையும் மறுபக்கம் யோசித்து செயல்படும் நிலையையும் வழங்குவர்.
பின்விளைவுகள் பற்றி யோசித்தே செயல்படுவீர்கள். அதன் காரணமாக வெற்றியும் அடைவீர்கள். குரு பகவானின் பார்வை விரய ஸ்தானத்தில் பதிவதால் சுபச்செலவு அதிகரிக்கும். இடம் வாங்குவது, தொழில் தொடங்குவது, பிள்ளைகள் கல்விக்காக செலவு செய்வது, வாகனம் வாங்குவது என செலவு ஏற்படும். செல்வாக்கிற்கு ஏற்பட்ட தடைகளை குருபகவானின் ஐந்தாம் பார்வை நீக்கும். ஏழாம் பார்வை தொழிலில் வருமானத்தை அதிகரிக்கும். தொழில் மீது அக்கறை ஏற்படும். பணியாளர்களுக்கு இது யோகமான மாதம். பிரச்னைகள் விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்புகள் வந்து சேரும். சிலருக்கு பதவி கிடைக்கும். விவசாயிகள் முன்னேறுவர். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையின் ஆதரவு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உடல்நிலை சீர்படும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்கள். மாணவர்கள் அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண் பெறுவர்.
சந்திராஷ்டமம்: மார்ச் 24,25
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,20,26,29, ஏப். 2,8,11
பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டால் வாழ்வு சிறக்கும்.
அவிட்டம் 1,2 ம் பாதம்: ஆயுள், கர்ம காரகனான சனி, தைரிய, வீரிய பராக்கிரம காரகனான செவ்வாயின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, செயல்களில் ஒரு பக்கம் வேகம் இருந்தாலும் மறுபக்கம் தடைகளும் ஏற்படும். அப்போதும் உங்கள் வழியை மாற்றிக்கொள்ளாமல் செயல்படுவீர்கள். பிறக்கும் பங்குனி மாதத்தில் உங்கள் நட்சத்திரநாதனும், ராசி நாதனும் தன, குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் வேகம் இருந்தாலும் சில தடைகளும் இருக்கும். ஒவ்வொன்றையும் போராடி முடிக்க வேண்டிய நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகுவும், சூரியனும் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவர். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். சுக்கிர பகவானின் சஞ்சார நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். குருபகவான் பார்வைகளால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். பெண்களுக்கு இந்த மாதம் யோகமான மாதமாக இருக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வரன் வரும். சுயதொழில் செய்வோரின் நிலை உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். விவசாயிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறும். அரசியல்வாதிகள் தங்கள் எதிர்பார்ப்பில் சில தடைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். மாணவர்கள் கூடுதல் கவனமுடன் படித்து தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவர்.
சந்திராஷ்டமம்: மார்ச் 25,26
அதிர்ஷ்ட நாள்: மார்ச் 17,18,27, ஏப். 8,9
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நல்வாழ்வு அமையும்.