இனி அயோத்தி ராமரை வீட்டிலேயே தினமும் தரிசிக்கலாம்.. ஆரத்திகளை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது தூர்தர்ஷன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2024 12:03
அயோத்தி ; அயோத்தி ராமர் கோவிலில் உள்ள ராம் லல்லா சிலைக்கு வழங்கப்படும் மங்கள, சிருங்கார், ராஜ்போக், சந்தியா மற்றும் ஷயன் ஆரத்திகளை டிடி நேஷனலில் தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. இது கோயிலுக்குச் செல்ல முடியாத பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமர் பக்தர்களுக்கு தேசிய ஒளிபரப்பான தூர்தர்ஷன் மகிழ்ச்சியான செய்தியை அளித்துள்ளது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் உள்ள ராம் லல்லா சிலைக்கு தினமும் நடக்கும் காலை நேர பூஜையை, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என தூர்தர்ஷன் அறிவித்துள்ளது.
அயோத்தி ராமர் கோவிலில் ராமர் லல்லாவுக்கு தினமும் 6 ஆரத்திகள் நடைபெறுகின்றன. இதில் காலை 4:30 மணிக்கு மங்கள ஆரத்தி, 6:30 மணிக்கு சிருங்கார் ஆரத்தி, மதியம் 12 மணிக்கு ராஜ்போக் ஆரத்தி, மதியம் 2 மணிக்கு உத்தபன் ஆரத்தி, இரவு 7 மணிக்கு சந்தியா ஆரத்தி, இரவு 10 மணிக்கு ஷயன் ஆரத்தி ஆகியவை அடங்கும். ராம் லல்லாவுக்கு வழங்கப்படும் காலை ஆரத்தி தினமும் காலை 6:30 மணி முதல்
டிடி நேஷனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது.
ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் அனுமதியைப் பெற்ற பிறகு, தினமும் காலையில் 30 நிமிடங்கள் ஆரத்தியை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என தூர்தர்ஷன் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில், சில மாதங்களுக்கு மங்கள ஆரத்தியை ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தினசரி ஒளிபரப்பிற்காக மூன்று பேர் கொண்ட குழுவினரை கோயில் வளாகத்தில் டி.டி நியமிக்க உள்ளது.