குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. குறிஞ்சிக்கடவுளாகக் குமரன் முருகனே மலைகளின் மீது ஆட்சி செய்கிறார். தெய்வங்களின் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் தெய்வசிகாமணி என்று போற்றுவர். கந்தனைக் கரம் குவித்து வணங்குவோருக்கு கலியின் கொடுமையும், காலபயமும் கிடையாது என்று வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் முக்கியமானது கார்த்திகை விரதம். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவர் கந்த பெருமான். கார்த்திகையில் கந்தனை வழிபட துன்பம், கடன் தொல்லை நீங்கும். முருகன் கோயில்களில் விளக்கேற்றி வழிபட வேண்டும். அரோகரா சொல்லி ஆறுமுகனை வழிபட அனைத்தும் கிடைக்கும். கார்த்திகை நன்னாளில் முருகப்பெருமானை வணங்கி நற்பலன்கள் பெறுவோம்.
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும். முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். சஷ்டியில் கந்தனை வழிபட துன்பம், கடன் தொல்லை நீங்கும்.