ஏகாதசி விரதம்; பெருமாளை வழிபட வறுமை நீங்கும்.. செல்வம் கிட்டும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மார் 2024 06:03
பங்குனி ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். பங்குனி மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் ஏகாதசி விசேஷமானவை. வளர்பிறையில் வரும் ஏகாதசியை ஆமலகீ ஏகாதசி எனப்படும். இன்று நெல்லி மரத்தை வலம் வந்து வணங்க வேண்டும். அல்லது வீட்டுப் பூஜையறையில் நெல்லிக்காய் வைத்து விஷ்ணு, மகாலட்சுமி மற்றும் அன்னபூரணியை வணங்க வேண்டும்.முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும் விரதம் இருக்கவேண்டும். ஏகாதசியைவிட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் அதை போற்றுகின்றன. இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியமாகும் வீட்டில் செல்வம் பெருகும் சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. ஏகாதசி விரதத்தை பட்டினியுடன் திருமாலின் நினைவாகவே முழுவதுமாக முறையாக அனுஷ்டித்தால் வறுமையும் ஓடிவிடும். கல்வி அறிவு பெருகும். தைரியம் உண்டாகும். வற்றாத செல்வம் கிட்டும். இன்று பெருமாளை வழிபட நல்லதே நடக்கும்.