சபரிமலை பம்பை நதிக்கரையில் இன்று அய்யப்பனுக்கு ஆராட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2024 07:03
சபரிமலை: சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா பம்பையில் ஆராட்டுடன் நிறைவு பெறுகிறது.
சபரிமலையில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மதியம் உற்சவபலியும், இரவில் சுவாமி யானை மீது எழுந்தருளும் ஸ்ரீபூதபலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. அய்யப்ப விக்ரகம் தாங்கிய அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வலம் மேள, தாளம் முழங்க சன்னிதானத்தில் இருந்து புறப்பட்டு, இன்று காலை 11 மணிக்கு பம்பை வந்து சேரும்.இங்கு தேவசம்போர்டு சார்பில் வரவேற்பு கொடுக்கப் பட்ட பின்னர் பம்பையில் ஆராட்டுக்குளத்துக்கு விக்ரகம் கொண்டு வரப்பட்டு சரணகோஷம் முழங்க அங்கு அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெறும்.