பதிவு செய்த நாள்
05
ஏப்
2024
11:04
தக்கலை, வேளிமலை குமாரசாமி திருக்கோவில் முருகப் பெருமான் வள்ளிநாயகி
திருக்கல்யாண திருவிழா கடந்த 29 தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று மாலையில் மயிலும் கிளியும் வாகனத்தில் சுவாமி அம்பாள், திருஆராட்டுக்கு கோவில் பின்புற வாசல் வழியாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து தெப்பக்குளத்தில் நடந்த திரு ஆராட்டுக்கு பின் ஊர்வலமாக கோவிலுக்குள் முன்புற வாசல் வழியாக கொண்டு செல்லப்பட்டனர். திருவிழா குழு சார்பில் பஞ்சாமிர்தம் அலங்கார தீபாராதனை நடந்தது. விழா குழு பேட்டரன் பிரசாத், தலைவர் சுனில் குமார், உதவி தலைவர்கள் ராமதாஸ், குமாரதாஸ், செயலாளர் சுரேஷ், துணை செயலாளர் முருகதாஸ், கோசி.ராமதாஸ் மற்றும் உறுப்பினர்கள், பக்தர்கள் கொண்டனர்.