கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலிலை சுற்றி நமஸ்காரத்தில் ஈடுபட்ட துாக்கக்காரர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2024 11:04
கொல்லங்கோடு; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1358 குழந்தைகளின் பெயர்கள் தூக்க நேர்ச்சைக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் தூக்கத்திருவிழா கட ந்த 1ம் தேதி இரவு கொடி ஏற்றத்துடன் துவங்கியது. விழாவில் வழக்கமான பூஜைகள் உட்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் 10 நாட்கள் நடக்கிறது. 10ம் தேதி குழந்தைகளுக்கான தூக்கநேர்ச்சை நடக்கிறது. மூன்றாம் நாள் நேற்றுமுன்தினம் தூக்க்காரர்களின் மருத்துவ பரிசோதனை நடந்தது. 4ம் நாள் நேற்று காலை 8.30 மணி முதல் தூக்க நேர்ச்சையின் குலுக்கல் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர், இரவு தூக்க்காரர்கள் கடல் நீராடி வட்டவிளை மூலஸ்தான கோவிலுக்கு சென்று விநாயகர் சன்னதியில் தேங்காய் உடைத்து மீண்டும் வெங்கஞ்சி திருவிழா கோவிலுக்கு வந்து நமஸ்காரத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டு, குமரி, நெல்லை , தூத்துக்குடி, கோவை , சென்னை , திருவனந்தபுரம், கொல்லம் என தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1358 குழந்தைகளின் பெயர்கள் தூக்கநேர்ச்சைக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. அத்துடன் 30 உபரி தூக்கக்காரர்கள் உள்பட 1388 தூக்க்காரர்களும் பெயர் பதிவு செய்து உள்ளனர். நேற்று முதல் நேர்ச்சை முடியும் வரை கோவில் வளாகத்திலேயே தங்கி இருக்கும் தூக்க்காரர்கள் கோவில் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படிகாலை , மாலை என இருவேளை நமஸ்காரத்தில் ஈடுபடுவர். இதுதூக்க நேர்ச்சை நடக்கும் பச்சிளம் குழந்தைகளுடன் தூக்க ரத வில்லில் ஏறும் தூக்க்காரர்களின் மன ஒருமைப்பாடு, உடல் ஆரோக்கியம் மற்றும் பக்தி மேன்மைப்படுத்தல் போன்றவற்றிற்காக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.