சனி பிரதோஷம்; விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2024 04:04
விருத்தாச்சலம்; விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நூற்றுகால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. சனி பிரதோஷத்தையொட்டி மாலை நந்தி பகவானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், பால் உட்பட 12 பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து அருகம்புல், மலர் மாலைகள் சாற்றி மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.