அவிநாசி அழகு நாச்சியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2024 03:04
அவிநாசி; அவிநாசி கங்கவர் வீதியில் ஸ்ரீ அழகு நாச்சியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழாவை முன்னிட்டு பூவோடு எடுத்தல் அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அவிநாசி கங்கவர் வீதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அழகு நாச்சி அம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 2ம் தேதி காப்புக் கட்டுதல், நந்தா தீபம் ஏற்றதலுடன் துவங்கியது. அதன் பின்னர் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை அழகு நாச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து காட்சியளித்தார். இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிம்ம வாகனத்தில் அம்மன் நான்கு ரத வீதிகளிலும் திருவீதி உலா வருதல், பூவோடு எடுத்தல், மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல், அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாளை மஞ்சள் நீர் உற்சவம் ,மஹா அபிஷேகம், ஊஞ்சல் உற்சவம், அம்மன் திருவீதி உலாவுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. பொங்கல் விழாவை முன்னிட்டு, அழகு நாச்சியம்மன் கோவில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.