Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : சித்திரை ராசி பலன் துலாம் : சித்திரை ராசி பலன் துலாம் : சித்திரை ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
கன்னி : சித்திரை ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னி : சித்திரை ராசி பலன்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2024
04:04

உத்திரம் 2,3,4 ம் பாதம்: ஆற்றலுக்கும் வெற்றிக்கும் காரகனான சூரியன், வித்தைகளுக்கு காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு வாழ்க்கையின் நெளிவு சுளிவு அனைத்தும் தெரிந்திருக்கும். நினைத்த இலக்கை அடைந்திடும் சக்தி உங்களுக்கு இருக்கும். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் மாதமாக இருக்கும். ஜென்ம ராசிக்குள் ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரித்தாலும் ஆறாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் சங்கடங்களை எல்லாம் விலக்கி வைப்பார். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். தொழில், பணி, வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.  எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகுவதுடன் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். மே 1 முதல் குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் நெருக்கடி விலகி, உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்ததை சாதிக்கும் சக்தி உண்டாகும். பாதிப்பு, நெருக்கடி யாவும் கட்டுப்படும். அந்நியரால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். மாதத்தின் முற்பகுதியில் செவ்வாய் பகவானும் ஆறாமிடத்தில் சஞ்சரிப்பதால் இரட்டிப்பு யோகம் உண்டாகும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். செயலில் வேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் தீரும். பெண்களுக்கு இதுவரையில் இருந்த நெருக்கடி தீரும். மாதத்தின் பிற்பகுதியில் நினைத்ததை சாதித்துக் கொள்ள முடியும். திருமண வயதினருக்கு வரன் வரும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயம் தரும். விவசாயிகளுக்கு கடந்த மாதம் இருந்த நெருக்கடி விலகும். கலைஞர்களுக்கு மாத பிற்பகுதியில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களின் விருப்பம் நிறைவேறும்.
சந்திராஷ்டமம்: மே. 8,9.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 14,19,23,28. மே. 1,5,10.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு குறைகளைப் போக்கும்.

அஸ்தம்: மனதிற்கும், மகிழ்ச்சிக்கும், புகழுக்கும் காரகனான சந்திரன், கல்விக்கும் அறிவுக்கும் காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு சாதுரியமாக செயல்படும் அறிவாற்றல் இருக்கும். உங்கள் வாழ்க்கையில் எந்தநிலை வந்தாலும் சோர்ந்து போகாமல் செயல்படக் கூடியவர்கள் நீங்கள். பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்வில் புதிய திருப்பத்தை உண்டாக்கும் மாதமாக இருக்கும். இதுவரையில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் மே 1 முதல் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு யோகத்தை ஏற்படுத்த இருக்கிறார். உங்கள் ராசிக்கும் குருபகவானின் பார்வை உண்டாவதால் இனி உங்களுக்கு மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். மாதம் முழுவதும் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் சங்கடங்களை விரட்டுவார். பிரச்னைகளில் இருந்து விடுவிப்பார். தைரியமாக செயல்பட்டு வெற்றி அடையக் கூடிய நிலையை ஏற்படுத்துவார். தொழில், வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். பணியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு சிலருக்கு உண்டாகும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் கனவு நனவாகும். பெண்கள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த சங்கடம் விலகும். மேற்கல்வி வேலை போன்ற எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிலருக்கு திருமண யோகம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தைரியமாக செயல்படும் நிலை ஏற்படும். விவசாயிகள் கடந்த காலத்தில் சந்தித்த நெருக்கடி விலகும். அரசியல்வாதிகள் வாழ்வில் எதிர்பார்த்த நன்மை ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி தரும். கலைஞர்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். மாணவர்களின் மேற்படிப்பு முயற்சி வெற்றி பெறும்.
சந்திராஷ்டமம்: மே 9,10
அதிர்ஷ்ட நாள்: ஏப்.14,20,23,29, மே 2,5,11
பரிகாரம்: சந்திரபகவானை திங்கட்கிழமையில் வழிபட வாழ்க்கை வளமாகும்.

சித்திரை 1,2 ம் பாதம்: ரத்தக்காரகன், யுத்தகாரகன், பராக்கிரம காரகனான செவ்வாய், கல்விக்காரகனான புதனின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை அடையும் சக்தி இருக்கும். சித்திரை மாதம் யோகமான மாதமாக இருக்கப் போகிறது. நட்சத்திரநாதன் ஆறாமிடத்தில் செவ்வாய், சனி பகவானும் சஞ்சரிக்கும் நிலையில் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். தடைபட்ட முயற்சி இனி நிறைவேறும். தடைபட்ட செயல்களில் லாபம் ஏற்படும். வம்பு, வழக்குகள் என்ற நிலை மாறி செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் விலகும். நண்பர்கள், வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட நெருக்கடி விலகும். ஜென்ம கேதுவால் ஏற்பட்ட குழப்பங்கள் மே 1 முதல் விலகும். பாக்கிய குருவால் உங்கள் வாழ்வு முன்னேற்றத்தை நோக்கி செல்லும்.  இதுவரை நீங்கள் சந்தித்த பிரச்னைகளுக்கு முடிவு ஏற்படும்/ புதிய இடம், வாகனம் வாங்க யோகமுண்டு. சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பணியாளர்களின் நிலை உயரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். பெண்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். திருமண வயதினருக்கு நல்ல தகவல் வரும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகி சுமூகமான நிலை ஏற்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்பர். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். விவசாயிகளின் விருப்பம் பூர்த்தியாகும். கலைஞர்களுக்கு வருமானம் கூடும். மாணவர்களின் கனவு நனவாகும்.
சந்திராஷ்டமம்: மே 10,11
அதிர்ஷ்ட நாள்: ஏப். 14,18,23,27, மே 5,9
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar