Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம் : சித்திரை ராசி பலன் மேஷம்: வைகாசி ராசி பலன் மேஷம்: வைகாசி ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மீனம் : சித்திரை ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மீனம் : சித்திரை ராசி பலன்

பதிவு செய்த நாள்

11 ஏப்
2024
04:04

பூராட்டாதி 4 ம் பாதம் : ஞானம், அந்தஸ்திற்கு காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு மற்றவர்களை வழி நடத்துகின்ற சக்தி இருக்கும். மற்றவர்களின் முன்பு நீங்கள் உயர்வான இடத்தில் இருப்பீர்கள். பிறக்கும் சித்திரை மாதம் உங்களுக்கு அனுபவங்களை உண்டாக்கும் மாதமாக இருக்கும். ஏப். 30 வரை உங்கள் ராசிநாதன் குருவால் சுபிட்சங்கள் அதிகரிக்கும். நினைப்பது நடக்கும். தொழில், உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். மே 1 முதல் குருபகவான் 3ம் இடத்திற்கு செல்வதால் இந்த நிலையில் மாற்றம் உண்டாகும். உங்களுடன் இருந்தவர்கள் உங்களுக்கு எதிராக மாறிடக்கூடிய வாய்ப்பு ஏற்படும். உங்களிடம் தொழில் கற்றவர்கள் உங்களுக்கு எதிராக தொழில் தொடங்கும் நிலையும் ஏற்படும். உத்தியோகத்தில் சிறுசிறு சங்கடங்கள் வரும். என்றாலும் மாதம் முழுவதும் அதிர்ஷ்டக் காரகனான சுக்கிரனும், வித்தைக்காரகனான புதனும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வரவுகள் இருக்கும். பொன், பொருள் சேரும். சிலருக்கு புதிய இடம் வாங்கும் நிலை உண்டாகும். ஜென்ம ராசிக்குள் ராகு, 7ல் கேது, 2ல் சூரியன் என்று சஞ்சரிக்கும் நிலை உங்களுக்கு எதிர்பாராத சங்கடங்களை ஏற்படுத்தும். பொருளாதார ரீதியாக, உடல் ரீதியாக, குடும்ப ரீதியாக நெருக்கடிகள் தோன்றும். குலதெய்வ வழிபாடும், இஷ்டதெய்வ வழிபாடும் உங்களைப் பாதுகாக்கும். குடும்பத்தினருடன் முடிந்தவரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். அரசியல்வாதிகள் நிதானமாக செயல்படுவதால் நன்மைகள் காணலாம். விவசாயிகளுக்கு மாதத்தின் தொடக்கத்தில் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பிற்பகுதியில் ஆதாயம் அதிகரிக்கும். குடும்பத்தினர், வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதால் பெண்கள் நெருக்கடியில் இருந்து தப்பலாம். ஜென்ம ராகு ஆசையை அதிகரிப்பார் என்பதால் ஒவ்வொன்றிலும் நிதானம் தேவை. குடும்ப கவுரவத்திற்கு மாறான செயல்கள் இக்காலத்தில் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் பெரியவர்களின் வழிகாட்டுதல்படி நடப்பது அவசியம்.  மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சந்திராஷ்டமம்: ஏப். 24
அதிர்ஷ்ட நாள்: ஏப். 21,30, மே 3,12
பரிகாரம்: துர்கையை வழிபட்டால் துன்பம் அனைத்தும் தீரும்.

உத்திரட்டாதி: ஆயுள்காரகன், கர்மக்காரகனான சனி, ஞானக்காரகன், தனக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு நினைப்பதை சாதித்திடும் சக்தி இருக்கும். பிறக்கும் சித்திரை உங்கள் நிலையில் மாற்றங்களை உண்டாக்கும் மாதமாக இருக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான் பல வழிகளிலும் செலவுகளை அதிகரிப்பார். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலையை உருவாக்குவார். பணவரவில் தடைகளை ஏற்படுத்துவார் என்றாலும் ஏப். 30 வரை உங்கள் ராசிநாதன் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மாதத்தின் முற்பகுதி உங்களுக்கு யோகமாக இருக்கும். பிற்பகுதியில் விரய சனி, சப்தம கேது, குடும்ப ஸ்தானத்தில் சூரியன் என்று உங்கள் நிலையில் குழப்பங்களை அதிகரிப்பார்கள். தேவையற்ற பிரச்னைகளில் தலையிட்டு அதன் வழியாக சங்கடங்களை சந்திக்க நேரலாம் கவனம்.   தொழில், வியாபாரம் போன்றவற்றில் நெருக்கடி ஏற்படும். நண்பர்களும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். புதிய நட்புகளால் சங்கடம் தோன்றலாம். அரசியல்வாதிகள் சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவது அவசியம். பெண்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்து நடக்க வேண்டிய நிலை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் தள்ளிப் போகும். தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகும் என்பதால் இக்காலத்தில் மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் உங்கள் விருப்பப்படி செயல்படுவதால் சங்கடங்கள் இல்லாமல் போகும். குலதெய்வ வழிபாடு உங்களை எல்லா சங்கடங்களில் இருந்தும் பாதுகாக்கும். விவசாயிகள் முடிந்தவரை நிதானமாக செயல்படுவது நல்லது.  மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதி சாதகமாக இருக்கும். பிற்பகுதியில் சில சோதனைகள் தோன்றும்.
சந்திராஷ்டமம்: ஏப்.25
அதிர்ஷ்ட நாள்: ஏப்.17,21,26,30, மே 3,8,12
பரிகாரம்: மீனாட்சியம்மனை வழிபாடு வாழ்க்கையை வளமாக்கும்.

ரேவதி: கல்விக்காரகன் வித்தைக்காரகனான புதன், ஞானக்காரகனான குருவின் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு, எந்த ஒரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டு வெற்றி அடையும் சக்தி உண்டு. பிறக்கும் சித்திரை மாதம் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்கும் மாதமாக இருக்கும். இந்த மாதம் முழுவதும் உங்கள் நட்சத்திரநாதன் உங்களுக்கு சாதகமாக சஞ்சரிப்பதுடன் அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனும் யோகத்தை வழங்கிட இருப்பதால் நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். பொன் பொருள் வரவு இருக்கும். செலவிற்கேற்ற வரவு உண்டாகும் இருந்தாலும் மே 1 முதல் உங்கள் ராசிநாதன் 3 ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் அடைந்து வந்த நன்மைகளில் மாற்றம் ஏற்படும். கவனமாக செயல்பட வேண்டியதாக இருக்கும். மற்றவர்களை அனுசரித்துப் போவதால் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கும். உங்கள் ஜென்ம ராசிக்குள் ராகு பகவான் சஞ்சரிப்பதால் ஆசைகள் அதிகரிக்கும். பொன் மீது பொருள் மீது ஆசை உண்டாகும். அதன் காரணமாக குறுக்கு வழியில் செல்ல முயற்சிப்பீர்கள். இக்காலத்தில் குறுக்கு வழி செயல்பாடுகள் சங்கடத்தை ஏற்படுத்தும். பிரச்சினையை உருவாக்கும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களையும் நட்பு வட்டத்தையும் அனுசரித்துச் செல்வது மிகவும் அவசியம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம்  வாக்கு வாதங்கள் வேண்டாம். யாரையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பதால் சங்கடங்கள் ஏற்படாமல் போகும். புதிய முயற்சிகளை இக்காலத்தில் தவிர்ப்பது நன்மையாகும். பெண்கள் கவனமாக செயல்பட வேண்டும் 7 ம் இடத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் வாழ்க்கைத் துணையிடமும் நட்புகளிடமும் கவனம் வேண்டும். பேச்சு, செயல் எல்லாவற்றிலும் நிதானம் வேண்டும். இல்லையெனில் தேவையற்ற சங்கடங்கள் தோன்றும். அரசியல்வாதிகள் வார்த்தைகளில் நிதானம் காக்க வேண்டும். இல்லையெனில் சட்ட சிக்கல்களுக்கு ஆளாக வேண்டிய நிலைவரும். விவசாயிகள் கவனமாக செயல்படுவதால் நஷ்டங்கள் இல்லாமல் போகும். மாணவர்களுக்கு மேற்படிப்பின் மீது கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: ஏப். 26.
அதிர்ஷ்ட நாள்: ஏப். 14,17,23. மே. 5,8.

பரிகாரம் பெருமாளை வழிபட பிரச்சினைகள் விலகும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் புரட்டாசி மாதம் கவனமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar