பதிவு செய்த நாள்
01
நவ
2012
10:11
சிவகிரி:வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி கோயிலில் மழைவேண்டி ஞானவேள்வி நிறைவு பெற்றது.வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்) கோயிலில் கார்த்திகை சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நிலவிய வறட்சியினை போக்குவதற்காகவும், அனைத்து பகுதிகளும் செழிப்புடன் இருப்பதற்காகவும் மழைவேண்டி ஞானவேள்வி கடந்த செப்.16ம் தேதி துவங்கியது.தொடர்ந்து சங்கரன்கோவில் கோமதியம்மாள் கோயில், தாருகாபுரம் மத்தீஸ்வர் கோயில், கரிவலம் பால்வண்ணநாதசுவாமி கோயில், தென்மலை திரிபுரநாத ஈஸ்வரர் கோயில், தேவதானம், தென்காசி, பாபநாசம், குற்றாலம், தலைக்காவிரி, மைசூர்பாக மண்டல், கொடுமுடி, சென்னிமலை, கரூர், பவானி, திருச்செங்கோடு, குளித்தலை, நெல்லை, கயத்தாறு, கோவில்பட்டி, கழுகுமலை உட்பட 25 புண்ணிய ஸ்தலங்களில் மழைப்பாடல்கள் மனம் உருகி பாடப்பட்டது.
நேற்று வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் ஞானவேள்வி நிறைவு விழா நடந்தது. காலை 11 மணிக்கு அபிஷேகம், 12 மணிக்கு தீபாராதனை, மாலை 6 மணிக்கு மலர் அலங்காரம், பெரு தீபவழிபாடு, மழைப்பதிகம் பாடல் ஆகியன நடந்தது. 7.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. மழைப்பதிக பாடல்களை கார்த்திகை சங்க தலைவர் குருமலை சவுந்திரராஜன், மேலக்கடையநல்லூர் சிவராமன், திருவாரூர் சீனிவாசன், தென்காசி கயிலை புனிதன், கயிலை கிருஷ்ணன் மற்றும் சிவனடியார்கள் பாடினர். ஞானவேள்வி ஏற்பாடுகளை வாசு., எம்எல்ஏ துரையப்பா, மாநில சுகாதாரதுறை இணை இயக்குனர் அருண்மொழி துரையப்பா, மாவட்ட அதிமுக பொருளாளர் சண்முகசுந்தரம், வசந்தா, ஈரோடு தொழிலதிபர் தேவராஜன், வாசு., தொழிலதிபர் தங்கப்பழம், சென்னை தாம்பரம் லிங்கம், கோவில்பட்டி சுகுமார்ராஜா, கீழக்கரிசல்குளம் வெள்ளைச்சாமி, சந்திரசேகரன், சீமான் மணிகண்டன், கோமு அம்மாள் உட்பட பலர் செய்திருந்தனர்.