பதிவு செய்த நாள்
25
ஏப்
2024
03:04
மாமல்லபுரம்; மாமல்லபுரம் அடுத்த எடையூர் ஊராட்சியில், கொக்கிலமேடு பகுதி உள்ளது. முற்காலத்தில், ‘கோகிலமேடு’என்றே, இவ்வூர் அழைக்கப்பட்டு உள்ளது. ‘கோகிலம்’ எனப்படும் பசுக்கள், அதிக அளவில் இப்பகுதியில் இருந்துள்ளன. இதனால்,
‘கோகிலமேடு’ என அழைத்து, நாளடைவில் கொக்கிலமேடு என்று மருவி அழைக்கப்படுகிறது. அப்பகுதியினர், பசுக்களின் பால், த யிர், நெய் ஆகியவற்றை , மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலுக்கு வழங்கி உள்ளனர். இக் கோவிலுக்கு சொந்தமான, 1.02 ஏக்கர்நிலமும் அங்கு உள்ளது. இதை யடுத்து, சித்திரை பிரம்மோற்சவ விழாவின், 8ம் நாள் உற்சவமாக, அப்பகுதி பக்தர்களுக்கு அருள்பாலிக்க,அப்பகுதிக்கு சுவாமி உலா செ ல்கிறார். தற் போது, கோவிலில் கட ந்த 17ம் தேதி முதல் சித்திரை பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று, ஸ்தலசயன பெருமாள், கிருஷ்ணர் தோற்றத்தில் எழுந்தருளி, காலை 6:45 மணிக்கு கோவிலிலிருந்து பல்லக்கில் புறப்பட்டு, கொக்கிலமேடு செ ன்றார். அங்குள்ள விநாயகர் கோவில் பகுதியில், அவருக்கு மண்டகப்படி நைவேத்ய வழிபாடு நடத்தி, பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி வீதியுலா சென்றபோது, பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். சுவாமி மண்டகப்படி வழிபாடு, தற்போது திறந்தவெளியில், தரையில் நடந்து வருகிறது. அதற்காக பிரத்யேகமாக மண்டபம் அமைக்க இருப்பதாக, அப்பகுதியினர்
தெரிவித்தனர். பின், மாமல்லபுரத்தில் வீதியுலா சென்று, பகல் 12:30 மணிக்கு, ஸ்தலசயனர் கோவிலை அடைந்தார்.