பதிவு செய்த நாள்
29
ஏப்
2024
01:04
மாமல்லபுரம்; மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், ஏப்., 23ம் தேதி சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. சுவாமிக்கு தினசரி காலை , இரவு, சிறப்பு வழிபாடு நடத்தி, வாகன சேவையாற்றி, வீதியுலா செல்கிறார். ஐந்தாம் நாளான நேற்று முன்தினம், சுவாமி கருடசேவையாற்றினார். அன்று காலை , பெருமாள், மோகினி நாயகியாக தோன்றி, பத்மாசூரனை அழித்ததன் நினைவாக, பல்லக்கில் நாச்சியாராக எழுந்தருளி வீதியுலா சென்றார். மாலை , பெருமாள் மற்றும் தேவியருக்கு திருமஞ்சனம் நடந்தது. இரவு, பெருமாள் ஊஞ்சல் சேவையாற்றினார். இரவு 11:00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி சேவையாற்றி, வீதியுலா சென்றார். இன்று காலை 10:00 மணிக்கு, திருத்தேரில் உலா செல்கிறார்.