பதிவு செய்த நாள்
06
நவ
2012
10:11
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள, சிவன் கோவிலில், 60 கோடி ரூபாய் செலவில், புதுப்பிக்கப்பட்ட குளத்தில், இந்துக்கள் வழிபாடு நடத்தினர். பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள, கட்டாஸ்ராஜ் சிவன் கோவில், வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலின் குளத்திலிருந்து சுற்றுப்புற பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. போதிய பராமரிப்பின்றி, இந்த கோவில் சிதிலமடைந்து கிடந்தது. குளத்து நீரை, அருகில் உள்ள சிமென்ட் தொழிற்சாலைகள் முறைகேடாக பயன்படுத்தி வந்தன.இதை எதிர்த்து, இங்குள்ள இந்துக்கள், பஞ்சாப் மாகாண, அரசிடம் புகார் செய்தனர். சுற்றுப்புற கிராமங்களுக்கு, குடிநீர் சப்ளை செய்யப்படும் குளம் என்பதால், இந்து அமைப்புகளும், மாகாண அரசும், 60 கோடி ரூபாய் செலவில் இந்த குளத்தை புதுப்பித்து உள்ளன. மேலும், இரண்டு கோடி ரூபாய் அளிக்க, அரசு சம்மதித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட குளத்தில், குறிப்பிட்ட அளவுக்கு மேல் தண்ணீர் எடுக்க, சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குளத்தில், தாமரை பூக்கள் மலர்ந்துள்ளன.கடந்த 3ம்தேதி, இந்த கோவில் குளத்தில் நூற்றுக்கும் அதிகமான இந்துக்கள் வழிபாடு செய்தனர்.