Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மாதம் கூழ் வார்க்க இலவசமாக ... வடபழனி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் வடபழனி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் கழுவன் விரட்டு திருவிழா
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் கழுவன் விரட்டு திருவிழா

பதிவு செய்த நாள்

18 மே
2024
06:05

சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் கழுவன் விரட்டு திருவிழா நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாக திருவிழா மே 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6ம் திருவிழாவான மே 17ம் தேதி கழுவன் திருவிழா நடந்தது. பாரம்பரிய முறைப்படி கழுவன் வேடமிட்டவரை கயிற்றால் கட்டி நாட்டார்கள் அமர்ந்திருந்த சபைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கோயிலுக்குள் திரண்டிருந்த ஏராளமான இளைஞர்கள் கழுவனை விரட்டினர். கழுவன் வேடமிட்டவர் திரும்ப விரட்டுவது போல் பாசாங்கு செய்தார். முற்காலத்தில் கிராமத்திற்குள் திருட வந்த கழுவனை மக்கள் பிடித்து சிங்கம்புணரி நாட்டார்களிடம் ஒப்படைத்ததாகவும், நாட்டார்கள் அவரை மன்னித்து பரிவட்டம் கட்டி மரியாதையோடு ஊரை விட்டு அனுப்பியதாகவும், ஊர் எல்லையில் படுத்து உறங்கிய கழுவனும் அவரது மனைவி கழுவச்சியும் சேவுகப்பெருமாள் ஐயனாரின் தேர் சக்கரம் ஏறி இறந்ததாக ஐதீகம். மேலும் மதுரையில் பாண்டியர் காலத்தில் நடந்த சமணர் கழுவேற்றம் சம்பவத்தை நினைவு கூறும் வகையிலும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மே 20ம் தேதி மாலை 3:00 மணிக்கு இக்கோயில் தேரோட்டம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: அயோத்தி கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா இனிதே நடைபெற வேண்டி, நகர காவல் ... மேலும்
 
temple news
சிவாஜிநகர்: கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தை முன்னிட்டு, பெங்களூரு சிவாஜிநகர் காசி விஸ்வநாதேஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் காரையூர் சிவன் கோயிலில் சாமி சிலைகளை மர்மநபர்களால் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar