கோவை; கோவை, பெரியநாயக்கன் பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோட்டில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பால தண்டாயுதபாணி சுவாமிக்கு சண்முக திரிசதி அர்ச்சனை நடைபெற்றது. இதில் திருமணம் கைகூடவும் ஐஸ்வர்யம் தரும் ஆரோக்கியமான வாழ்க்கை பெறவும் பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பூஜையில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.