Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அர்த்தநாரீஸ்வரர் விரதம், பவுர்ணமி ... இன்று மஹா பெரியவா ஜெயந்தி; பரமாச்சாரியாரின் பெருந்தன்மை இன்று மஹா பெரியவா ஜெயந்தி; ...
முதல் பக்கம் » துளிகள்
இன்று நடமாடும் தெய்வம் காஞ்சி மஹாபெரியவர் பிறந்த நாள்
எழுத்தின் அளவு:
இன்று நடமாடும் தெய்வம் காஞ்சி மஹாபெரியவர் பிறந்த நாள்

பதிவு செய்த நாள்

24 மே
2024
08:05

காஞ்சி மகாபெரியவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கொண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார். பத்து வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர். நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், புராணங்களை சுயமாக கற்றுத் தேர்ந்தவர். சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர் காஞ்சி மஹாபெரியவர். முற்பிறவிகளில் நாம் செய்த வினைகளை போக்கவே கடவுள் பிறவி கொடுத்திருக்கிறார். இதை உணராமல் காமம், கோபம், பொறாமை, அகங்காரம் போன்ற குணங்களால் மேலும் தீமை செய்து துன்பக்கடலில் தவிக்கிறோம். இதில் இருந்து நம்மை கரை சேர்க்கவே மகான்கள் பூமியில் அவதரிக்கின்றனர். இதில் நடமாடும் தெய்வம் எனப் போற்றப்படும் காஞ்சி மஹாபெரியவர் அனைவரும் ஆன்மிக ஞானத்தை பெற வேண்டும் என்பதற்காக ஆன்மிகம், சாஸ்திரத்தை புரியும் வகையில் எளிமையாக உபதேசித்தார்.

* பிறவி எடுத்ததன் பிரயோஜனமே யாரிடமாவது மாறாத பிரியம் வைப்பதுதான். பிரியம் வைப்பவர் எந்தக் காலத்திலும் நம்மை விட்டு பிரிந்து செல்லாதவராக இருக்கவேண்டும். அந்தப் பிரியத்தால் நம் ஜன்மம் பிரயோஜனம் உடையதாகும். அவரையே நாம் ஸ்வாமி என்கிறோம்
* உண்மையான அன்பு யாரிடம் உள்ளதோ அவரே உயர்ந்தவர். வெறும் நாடகத்தனமான பக்தி கடவுளுக்குத் தேவையில்லை. யார் தன் அகந்தையை விட்டொழித்து அவரை சரணாகதி அடைகிறாரோ, அவருக்குத்தான் கடவுள் காட்சியளிக்கிறார்.
* ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் எப்போதோ முடிந்த காரியம். இதை மனதில் நிறுத்தினால் எந்தவித கர்வமும் ஏற்படாது. ஈடுபடும் செயலில் விருப்பு, வெறுப்பு தோன்றாது. பலன் எதிர்பார்க்காது. அப்போது அச்செயல் சிறப்பாக செய்யப்படும்.
* வாழ்க்கை என்றால் கஷ்டம், ஆபத்து எல்லாம் வரத்தான் செய்யும். அதை தர்மத்தால் வெல்ல வேண்டும். இந்த வழியை நமக்கு சொல்லிக்கொடுத்தவர் ஸ்ரீராமபிரான். அவர் தர்மத்தை காத்தார். முடிவில் அதுவே அவருக்கு ஜயத்தை கொடுத்தது.
* மனதில் உள்ளதை வெளியிட்டுச் சொல்வதற்கென்றே பகவான் மனிதனுக்குப் பேசும் சக்தியைத் தந்திருக்கிறார். அப்படி மனதில் தோன்றுவதை அப்படியே பேசுவது சத்தியம். இதற்காக மனதில் தோன்றும் தீய எண்ணத்தை வெளிப்படுத்தினால் சத்தியமாகுமா... இல்லை. எனவே நல்லதையே நினைக்க வேண்டும்.
* வாழ்க்கைத் தரம் என்பது பொருட்கள் பெருக்கத்தில் இல்லை. அதாவது தேவைகளை அதிகமாக்கினால் மனஅமைதி குறையும். தேவைகள் குறைந்தால் நிம்மதி கூடும்.
* தினமும் தாய் தந்தையரையும் ஆசிரியரையும் மனதில் நினைத்து வணங்க வேண்டும். பிறகு உலகம் முழுவதிற்கும் தாயும் தந்தையுமாக இருக்கிற ஸ்வாமியை வணங்க வேண்டும். இப்படி செய்தால் மனதில் தோன்றும் அழுக்குகள் மறையும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஆனி வளர்பிறை ஏகாதசிக்கு நிர்ஜலா ஏகாதசி என்று பெயர். இது பீமன் அனுஷ்டித்த ஏகாதசி விரதமாகும். இந்த ... மேலும்
 
temple news
ஆரண்ய கெளரி விரதம்: அம்பிகையின் தெய்வீக சக்தி அனைத்திலும் கொலுவிருக்கிறது. காடு, மலை, மரங்கள், நதி என ... மேலும்
 
temple news
செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு. ஒருவருக்கு பொருளாதார நிறைவை வழங்குவது அங்காரகன். ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபட சிறந்த நாள் சதுர்த்தி தினம். அமாவாசையில் இருந்து வரும் நான்காவது திதி சதுர்த்தியாகும். ... மேலும்
 
temple news
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் சொரூபம், தத்தாத்ரேயர்.  ‘தத்தகுரு’ எனப்படும் இவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar