நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா விநாயகர் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2024 12:05
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட திருவிழா முன்னோட்ட மாக விநாயகர் கொடியேற்றம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுதும் 12 மாதமும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆனித் தேரோட் டத் திருவிழா மிகவும் சிறப்பானது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திரு விழாவுக்கான முன்னேற்பாடுகள் 45 நாட்களாக நடைபெறும்.
சங்கிலி பூதத்தார் சித்திரை கொடை விழா நடந்தது. தொடர்ந்து புட்டாரத்தி அம்மன் கோயி லில் வைகாசி 10 நாள் திருவிழா நடந்தது. ஆனித் தேராட்டத்திருவிழாவின் முன் னோட்டமாக விநாயகர் கொடியேற்றம் நேற்று காலை நடந்தது. முன் னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனை நடந்தது. விநாயகர் கோயில் கொடியேற்றத்தை தொடர்ந்து ஆனித் தேரோட்டத் திருவிழா வுக்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் துவக்கியுள்ளனர்.தேரை சுத்தம் செய் தல், பந்தல் அலங்காரம் அமைத்தல், அழைப்பி தழ் அச்சிடுதல், கலை நிகழ்ச்சி ஏற்பாடுகள் என பல பணிகள்களைகட்ட துவங்கியுள்ளன. ஜூன் 13ம் தேதி ஆனித் தேரோட்டத்திற் கான கொடியேற்றம் சுவாமி சன்னதி கொடிம ரத்தில் நடக்கிறது. ஜூன் 21ம் தேதி நெல்லையப் பர், காந்திமதி அம்பாள் உட்பட பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. இதனால் நெல்லையப்பர் கோயில் ரதவீதிகள் களைகட்ட துவங்கியுள்ளது.