Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை அஷ்டமி விரதம்; காலபைரவரை ... தத்தாத்ரேயர் ஜெயந்தி; தத்தாத்ரேயரை வழிபட வேண்டியது கிடைக்கும்.. உடனே நடக்கும்..! தத்தாத்ரேயர் ஜெயந்தி; தத்தாத்ரேயரை ...
முதல் பக்கம் » துளிகள்
நரேந்திரன் வழியில் நரேந்திரமோடி.. மூன்று நாள் தியானத்தில் பிரதமர்!
எழுத்தின் அளவு:
நரேந்திரன் வழியில் நரேந்திரமோடி.. மூன்று நாள் தியானத்தில் பிரதமர்!

பதிவு செய்த நாள்

31 மே
2024
12:05

பிரதமர் நரேந்திரமோடி கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், பிரதமர் மோடி தன் மூன்று நாள் தியானத்தை நேற்று இரவு துவங்கினார். ஓம் மந்திரம் பின்னணியில் முழங்க, விவேகானந்தர் சிலை எதிரே அமர்ந்து தியானம் செய்து வருகிறார். இதேபோல் 1892ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி, கன்னியாகுமரிக்கு வந்தார் சுவாமி விவேகானந்தர். பகவதி அம்மன் தவம் புரிந்த பாதச்சுவடு இருக்கும் பாறையை காட்டி அங்கு செல்ல வேண்டும். அழைத்துச்சென்று விட இயலுமா? என அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மீனவரிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அதற்கு அவர் கேட்ட தொகை விவேகானந்தரிடம் இல்லை . உடனே கடலில் குதித்து நீந்தியே பாறையை அடைந்த விவேகானந்தர் அந்த பாறையில் தவம் செய்தார். டிசம்பர் 25, 26, 27 என மூன்று தினங்கள் அந்தப் பாறையிலேயே தங்கி தவம் செய்தார், சுவாமி விவேகானந்தர். 1892ம் ஆண்டு விவேகானந்தர் தவம் செய்த நிலையில் 1893ம் ஆண்டு சிகாகோ மாநாட்டில் உரை நிகழ்த்தினார். அந்த வேள்வி மறு ஆண்டிலேயே சுவாமி விவேகானந்தரை வானாளாவிய உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது. அந்த பாறையின் பெருமைக்கும், அருமைக்கும் அது ஒரு சாட்சி.

இந்த பாறையில் தவம் செய்தவர்களின் முன்னோடி பெண் தெய்வமான பகவதி அம்மன்தான். பாணாசுரன் என்னும் அரக்கனை வதம் செய்ய பார்வதி தேவி எடுத்த அவதாரமே பகவதி அம்மன். பாணாசுரன் அரக்கனோ, முனிவர்கள், தேவர்கள் பிற விலங்குகள் யாராலும் தான் கொல்லப் படக்கூடாது என வரம் வாங்கியவன்.முனிவர்களையும், தேவர்களையும் கொடுமை செய்து வந்தவன். அவனை கன்னி வடிவிலான பகவதியாக வந்து வதம் செய்தார் பகவதி அம்மன். அதன் நினைவாகத்தான் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அந்த பகவதிஅம்மன் சிவபெருமானை வேண்டி ஒற்றைக்காலில் தவம் புரிந்த பாறையும் இது தான். இப்போதும் கூட அம்மன் பாதம் என்னும் பெயரில் கால் தடம் தரிசனமும் இங்கு செய்வது வழக்கம். பகவதி அம்மன் தவம் புரிந்த பாறை என்பதாலேயே விவேகானந்தர் இங்கு சென்றார். மூன்று நாள்கள் தவம் செய்தார். அதே பாணியில் நரேந்திரனை அடியொற்றி, நரேந்திரமோடியும் செல்கிறார். மூன்று நாள்கள் தியானம், தவம் செய்கிறார். இன்று அதிகாலை சூரிய உதயத்தை தரிசித்தார். தொடர்ந்து விவேகானந்தர் தியானம் செய்த இடத்தில் காலை காவி உடை அணிந்த நிலையில் ஓம் மந்திரம் பின்னணியில் முழங்க, விவேகானந்தர் சிலை எதிரே அமர்ந்து தியானம் செய்து வருகிறார். நேற்று இரவு தொடங்கிய தியானம் இரண்டாம் நாளாக இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

கன்னியாகுமரியில் கடல்நடுவே இருக்கும் விவேகானந்தர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்யும் பாறை, 1892ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் வந்து புனிதம் அடைந்த இடம். சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன். அன்று நரேந்திரன் தியானம் செய்த பாறையில் இன்று நரேந்திர மோடி தியானம் செய்வது குறிப்பிடத்தக்கது. அதிலும் 1892ம் ஆண்டு, சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த டிசம்பர் 25, 26, 27 தேதிகளின் திதி, நட்சத்திரமும்,  பிரதமர் நரேந்திரமோடி தியானம் செய்யும் நாளும் ஒன்றாக இருப்பது சிறப்பிற்கே சிறப்பு சேர்க்கிறது.

 
மேலும் துளிகள் »
temple news
கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து ... மேலும்
 
temple news
திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி ... மேலும்
 
temple news
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான இன்று பரணி தீபம் ஏற்றுதல் சிறப்பு. வாசலில் 2 தீபங்களும், பூஜை ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரிய விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதம். கார்த்திகை சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar