பெரியபாளையரேந்தல் முத்துமாரியம்மன் கோயில் குகும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2024 04:06
கீழக்கரை; கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட பெரிய பாளையரேந்தல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கடந்த ஜூன் 10 அன்று அனுக்ஞை விநாயகர், வாஸ்து பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. இன்று காலை 7:00 மணிக்கு கோபூஜை, கும்ப பூஜை உள்ளிட்ட நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவிற்கு பிறகு சுமங்கலி பூஜை, நாடி சந்தனம், பூர்ணாகுதி உள்ளிட்டவைகள் நடந்தது. காலை 10:30 மணிக்கு கடம் புறப்பாடு நடந்த பின்பு மூலவர்கள் யோக கணபதி, முத்து மாரியம்மன், கருப்பண்ணசாமி, முனீஸ்வரர் கோயில் சன்னதி விமான கலசங்களில் திருப்புல்லாணி பாபு சாஸ்திரி குழுவினரால் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள் மற்றும் பெரியபாளையரேந்தல் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.