Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் : ஆனி ராசி பலன் துலாம் : ஆனி ராசி பலன் துலாம் : ஆனி ராசி பலன்
முதல் பக்கம் » ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 )
கன்னி : ஆனி ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னி : ஆனி ராசி பலன்

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2024
12:06

உத்திரம் 2, 3, 4 ம் பாதம்: வித்யா காரகனான புதன், ஆத்ம காரகனான சூரியன் அம்சத்தில் பிறந்து விவேகமுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டம் தரும். உங்கள் நட்சத்திரநாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வியாபாரம் விருத்தியாகும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். பணியாளர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களுக்கு அனுமதி கிடைக்கும். ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் புதனால் புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் வந்து சேரும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்ப்பு இல்லாமல் போகும். உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலக ஆரம்பிக்கும். தொழில் ரீதியாக ஏற்பட்ட போட்டி விலகும். பணியாளர்கள் ஒத்துழைப்பின் காரணமாக செய்யும் தொழில் அபிவிருத்தியாகும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். நீண்ட நாளாக குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்களின் விருப்பம் நிறைவேறும். உங்கள் செயல்களில் வெற்றி உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி எண்ணம் பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 2
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 19, 23, 28, ஜூலை 1, 5, 10, 14
பரிகாரம்: வீரபத்திரரை வழிபட மனதில் தைரியம் வளரும்.

அஸ்தம்: மனக்காரகனான சந்திரன், கல்விக் காரகனான புதன் அம்சத்தில் பிறந்து திட்டமிட்டு செயல்படும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் விருப்பம் நிறைவேறும் மாதமாக இருக்கும். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகளால் உங்கள் செல்வாக்கு உயரும். அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். முயற்சிகள் வெற்றியாகும். குலதெய்வ அருளும், இஷ்ட தெய்வ அருளும் வேண்டுதல்களை நிறைவேற்றும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், புதனும் உங்கள் வாழ்க்கையில் புதிய  நம்பிக்கையை உண்டாக்குவார்கள். அரசு வழி முயற்சிகள் ஆதாயத்தை வழங்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். செய்யும் தொழிலில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதியருக்குள் இருந்த சங்கடங்கள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். கல்வியாளர்களின் செல்வாக்கு உயரும். மாணவர்களுக்கு மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். பூமி சம்பந்தப்பட்ட விவகாரம் ஏற்படும் என்றாலும், விடாமுயற்சியால் அதை சரி செய்வீர்கள்.
சந்திராஷ்டமம்: ஜூலை 3
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 20, 23, 29, ஜூலை 2, 5, 11, 14
பரிகாரம்: கோதண்ட ராமரை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும்.

சித்திரை 1, 2 ம் பாதம்: தைரிய காரகன் செவ்வாய், புத்தி காரகன் புதன் அம்சத்தில் பிறந்து சாதுரியமாக செயல்படும் உங்களுக்கு ஆனி மாதம் அதிர்ஷ்டமான மாதமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் உங்கள் செல்வாக்கை உயர்த்துவார். வருவாயை அதிகரிப்பார். அரசு அலுவலர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வை வழங்குவார். நேற்று வரை இருந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, உங்கள் அந்தஸ்தையும் செல்வாக்கையும் உயர்த்துவார். தன்னம்பிக்கையை அதிகரிப்பார். பொன் பொருள் சேர்க்கையை வழங்குவார். இந்த நேரத்தில் ராஜ கிரகமான சூரியனும் உங்கள் ராசிநாதனும் சாதகமாக இருப்பதால் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும். சட்ட சிக்கல்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தவர்களுக்கு விசா கிடைக்கும். மேற்கல்வி முயற்சி வெற்றியாகும். கல்வியாளர்கள், கல்வி நிறுவனம் நடத்துவோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். தம்பதியருக்குள் ஒற்றுமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 4
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 18, 23, 27, ஜூலை 5, 9, 14
பரிகாரம்: கள்ளழகரை வழிபட்டால் சங்கடம் அனைத்தும் விலகும்.

பகிர்க copied
 
மேலும் ஐப்பசி ராசி பலன் (18.10.2026 - 16.11.2026 ) »
temple news
மேஷம்: அசுவினி: எந்த நிலை வந்தாலும் அதை எதிர்கொண்டு வாழக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் ... மேலும்
 
temple news
ரிஷபம் .. கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: செல்வாக்கு, அந்தஸ்து என்ற நோக்கத்துடன் வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிதுனம். .மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: திட்டமிட்டு செயல்படுவதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி ... மேலும்
 
temple news
கடகம்.. புனர்பூசம் 4 ம் பாதம்: சூழ்நிலை அறிந்து செயல்படக்கூடிய உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் யோகமான ... மேலும்
 
temple news
சிம்மம்.. மகம்: படிப்பினைகளால் பாடம் கற்றுவரும் உங்களுக்கு, பிறக்கும் ஐப்பசி மாதம் சங்கடங்கள் விலகும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar