பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
12:06
சித்திரை 3, 4 ம் பாதம்: அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரன், வீரிய காரகனான செவ்வாய் அம்சத்தில் பிறந்த நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். பிறக்கும் ஆனி மாதம் முன்னேற்றத்தை உண்டாக்கும். ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த வருமானம் வரும். தெய்வ அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். குருவின் பார்வைகள் விரய, தன, சுக ஸ்தானங்களுக்கு உண்டாவதால் சுபச்செலவு அதிகரிக்கும். சிலர் சொந்த வீடு கட்டும் முயற்சியை மேற்கொள்வர். பணவரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உங்கள் மனதில் இருந்த சங்கடம் நீங்கும். சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் ஆரோக்கியம் ஏற்படும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உத்தியோகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்குகள் சாதகமாகும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதின் வழியாக நன்மை காணலாம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி ஜூன்19 முதல் வக்ரம் அடைவதால் பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களின் மேற்கல்வி முயற்சி வெற்றி பெறும். தம்பதியர் பிரச்னை முடிவிற்கு வரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 4
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 18, 24, 27, ஜூலை 6, 9, 15
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட சங்கடங்கள் விலகும்.
சுவாதி: யோகக்காரகன் ராகு, அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் 6 ம் இடத்தில் சஞ்சரிப்பதும், ராசிநாதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் யோகம் அளிக்கும். கடந்த கால நெருக்கடி மறையும். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். விற்பனையாகாமல் தேங்கிய பொருட்கள் நல்ல விலைக்கு செல்லும். எதிரிகளால் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். வழக்கு, விவகாரம் சாதகமாகும். நினைத்ததை சாதிக்கும் நிலை ஏற்படும். தெய்வ அருள் உண்டாவதுடன் வேண்டுதல்களையும் நிறைவேற்றுவீர்கள். வருமானம் பல வழியில் வரும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகி சந்தோஷமான நிலை ஏற்படும். உங்கள் மனதை வாட்டிய பிரச்னை விலகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் இருந்த சங்கடங்கள் நீங்கும். பெரியோருடன் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 5
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 22, 24, ஜூலை 4, 6, 13, 15
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்: களத்திரக்காரகனான சுக்கிரன், ஞானக்காரகனான குரு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு, பிறக்கும் ஆனி மாதம் திருப்புமுனையான மாதமாக இருக்கும். யோகக்காரகன் ராகுவால் நீங்கள் நினைத்தது நடந்தேறும். மேலைநாட்டு தொடர்பு ஆதாயத்தை உண்டாக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். விற்பனை உயரும். எதிர்பார்த்த வருமானம் வரும். மனதில் இருந்த பயம் நீங்கும். உங்கள் முதலீடு லாபத்தை ஏற்படுத்தும். திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர்கள். செய்யும் தொழிலில் அக்கறை அதிகரிக்கும். பாக்கிய ஸ்தான சுக்கிரனால் பொருளாதாரம் உயரும். புதிய பொருள் சேரும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். குருபார்வை விரய ஸ்தானத்திற்கு உண்டாவதால் புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தாய்வழி உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர்களின் விருப்பம் பூர்த்தியாகும். பணியாளர்களின் நிலை உயரும். எதிர்பார்ப்பு நிறைவேறும். சேமிப்பு உயரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 6
அதிர்ஷ்ட நாள்: ஜூன் 15, 21, 24, 30, ஜூலை 3, 12, 15
பரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாட்டால் நன்மை அதிகரிக்கும்.