பொள்ளாச்சி கோவில்களில் வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூன் 2024 12:06
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது. பொள்ளாச்சி அருகே, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜப்பெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு, உற்சவ மூர்த்திகளுக்கு பால், இளநீர், தேன், நெல்லி பொடி, மஞ்சள் பொடி, தயிர், மஞ்சள் துாள், சந்தனம், பன்னீர் என பலவிதமான அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன் பெருமாள் அருள்பாலித்தார். விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் வளர்பிறை ஏகாதசி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.