பதிவு செய்த நாள்
20
ஜூன்
2024
01:06
பெரியகுளம்; பெரியகுளம் கோயில்களில் ஆனி மாதம் வளர்பிறை பிரதோஷம் கோலாகலமாக நடந்தது. பாலசுப்பிரமணியர் கோயிலில் ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன், பாலசுப்பிரமணியர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கைலாச பட்டி கைலாசநாதர் கோயிலில் கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவன், ஞானாம்பிகை அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்திராபுரித்தெருவில் தையல் நாயகி உடனுறை சிவனேஸ்வரருக்கும், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் அதிகாரநாகராஜருக்கு, நந்தி பகவானுக்கும், பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீராஜன் செய்திருந்தார்.