பதிவு செய்த நாள்
12
நவ
2012
10:11
சபரிமலை: சித்திரையாட்டு உற்சவத்திற்காக, சபரிமலை நடை நவ.11 திறக்கப்பட்டது. நவ.12 உற்சவம் நடைபெற்றதும், இரவே நடை அடைக்கப்படும்.சபரிமலை அய்யப்பன் கோவிலில், நவ.12 சித்திரையாட்டு உற்சவம் நடைபெற உள்ளது. திருவிதாங்கூர் மன்னராக இருந்த, ஸ்ரீசித்திரை திருநாள் என்பவரின் பிறந்த நாளன்று, இந்த உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்.இதற்காக, அய்யப்பன் கோவில் நடை நவ.11 மாலை, 5:30 மணிக்கு திறக்கப்பட்டது. நவ.11 வேறு பூஜைகள் ஏதுமில்லை; நவ.12 அதிகாலை, கணபதி ஹோமத்துடன் உற்சவம் துவங்கும். உற்சவத்தை ஒட்டி, நவ.12, சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகமும் நடைபெறும். தற்போது, கோவிலில் தலைமை அர்ச்சகராக பணியாற்றி வரும், பாலமுரளி நம்பூதிரியின் பதவி காலம், நவ.12 முடிகிறது. உற்சவம் முடிந்து, நவ.12, 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பின், மண்டல உற்சவத்திற்காக, வரும், 15ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.