சிவன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்த தினமே பிரதோஷம். இன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை உள்ள நேரம் பிரதோஷம் காலமாகும். இந்த நேரத்தில் சிவனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம்.
சிவன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்த தினமே பிரதோஷம். சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது கிடைக்கும். மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது சிறப்பு. பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். பிரதோஷ தினத்தில் தான் சிவன் ஆலகால விஷத்தை உண்டு இந்த அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகிறது.நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். சிவன் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி திதி வரும் நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் திரயோதசி திதி நாளில், பிரதோஷ விழா கொண்டாடுவது வழக்கம். பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவனை வழிபடுவர். பிரதோஷத்தில் நரசிம்மரை வழிபட கேட்டது உடனே கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது நல்லது. இன்று பிரதோஷ காலத்தில் செய்யும் சிவ வழிபாடு பலகோடி புண்ணியத்தை தரும்!