உத்திரமேரூரில் தங்கள் கரங்களால் பாலாபிஷேகம் செய்து மாரியம்மனை வழிபட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2024 12:07
காஞ்சிபுரம்; உத்திரமேரூர் பஜார் வீதியில் பழமையான நடுத் தெரு மாரியம்மன் கோவிலில், இக்கோவிலில் 1008 பால் குட ஊர்வலம் மற்றும் பாலாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி விரதமிருந்த பக்தர்கள், பாலசுப்பிரமணியர் கோவிலில் இருந்து, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வானவேடிக்கை முழங்க, 1,008 பால்குடங்களை தலையில் சுமர்ந்தபடி பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நடுத் தெரு மாரியம்மனுக்கு பக்தர்கள் தங்கள் கரங்களால் பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து. அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. பின்னர் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர், விழாவிற்கான ஏற்பாடுட்டை விழா குழுவினர் செய்திருந்தனர்.