வாழ்வில் சாதனை படைத்திடும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு சுக்கிரன், குரு நல்ல பலன்களை வழங்குகின்றனர். வாக்கு ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் டென்ஷனை ஏற்படுத்துவார். செய்யும் செயலில் நிதானத்தைப் பின்பற்றி ரிலாக்ஸா இருப்பது நல்லது. அனுபவசாலிகளின் ஆலோசனையைக் கேட்பது பயன் தரும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பு நடைமுறை மேற்கொள்வது அவசியம். புத்திரர் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காண்பர். பூர்வ சொத்தில் சராசரி வருமானம் கிடைக்கும். எதிரிகளிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பதால் மனநிம்மதியைப் பாதுகாக்கலாம். குடும்பத்தேவைகளை நிறைவேற்ற கடன் வாங்க நேரிடும். கணவன், மனைவி ஒற்றுமையால் குடும்பத்தில் அமைதி நிலைக்கும். நண்பர்களின் ஆலோசனையைப் பின்பற்றுவதால் வளர்ச்சி உண்டாகும். தொழிலதிபர்கள் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் மிதமான முன்னேற்றம் காண்பர். வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய உத்திகளால் வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பெறுவர். வருமானம் சீராக கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்தித்தாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது. குடும்ப பெண்கள் அன்றாடச் செலவில் சிக்கனத்தை மேற்கொள்வர். சேமிப்பு பணத்தை முக்கிய செலவுகளுக்கு எடுக்க வேண்டிவரும். பணிபுரியும் பெண்கள் திறமையாகச் செயல்புரிந்து குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். சலுகைகள் கேட்பதில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறக்க புதிய நடைமுறைகளைப் பின்பற்றுவர். பணவரவு சீராக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெற அதிகப்பணத்தை செலவழிப்பர். விவசாயிகள் மிதமான மகசூலும் அதற்கேற்ப வருமானத்தையும் காண்பர். கால்நடை வளர்ப்பிலும் லாபம் உண்டு. மாணவர்கள் அக்கறையுடன் படித்து சிறந்த தேர்ச்சி பெறுவர். கலைத்துறையிலும் ஆர்வம் கொள்வர்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உஷார் நாள்: 30.11.12 காலை 7.06 முதல் 2.12.12 மாலை 5.59 வரை வெற்றி நாள்: நவம்பர் 19, 20 நிறம்: பிரவுன், வெள்ளை எண்: 6, 9
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »