பதிவு செய்த நாள்
01
ஆக
2024
10:08
அமாவாசை, பவுர்ணமியில் இருந்து வரும் திரயோதசி திதி நாளில், பிரதோஷ விழா கொண்டாடப்படுகிறது. பிரதோஷ தினத்தில் தான் சிவன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்தார். மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிஷேகம் தரிசிப்பது சிறப்பானது.
நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். சிவன் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி திதி வரும் நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் திரயோதசி திதி நாளில், பிரதோஷ விழா கொண்டாடுவது வழக்கம். பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவனை வழிபடுவர். பிரதோஷத்தில் நரசிம்மரை வழிபட கேட்டது உடனே கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது நல்லது. இன்று சிவனை வழிபட துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.