நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய காமாட்சியம்மன் கோவிலில் மோட்ச தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2024 03:08
காஞ்சிபுரம்; கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளானைப்படி காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் இன்று மோட்சதீபம் ஏற்றப்பட்டது. வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரிடரில் சிக்கி நுாற்றுக்கணக்கானோர், உயிரிழந்திருப்பதையும், ஆயிரக்கணக்கானோர் மிகப்பெரிய அல்லல்களை சந்தித்து கொண்டிருப்பதையும் அறிந்து, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளார். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், அல்லல்களில் தவிப்போர் விரைவில் நிவாரணம் பெறவும், சுவாமிகள் காஞ்சி காமாட்சியம்மனை பிரார்த்திக்கிறார்கள். காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அருளானைப்படி, உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய, காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது என, காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர் தெரிவித்தார்.