ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், ரெங்க மன்னார் சயனசேவை உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2024 07:08
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்சவம் ஏழாம் திருநாளில், சயன சேவை நிகழ்ச்சி கிருஷ்ணர் கோயிலில் இன்று இரவு நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு இன்று காலை ஆண்டாள், ரெங்கமன்னார் கோயிலில் இருந்து புறப்பட்டு மாடவீதிகள் சுற்றி கிருஷ்ணர் கோயிலை வந்தடைந்தனர். அங்கு இரவு 7:30 மணிக்கு ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனத்தில் எழுந்தருளினார். கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராம ராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலை துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.