அவிநாசி; அவிநாசி அடுத்த சுதந்திர நல்லூரில் ஸ்ரீ அத்தனூர் அம்மன் கோவிலில் பொங்கல் சாட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவிநாசி அடுத்த சுதந்திர நல்லூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அத்தனூர் அம்மன் கோவிலில் பொங்கல் சாட்டு விழா கடந்த 3ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதன் பிறகு 6ம் தேதி இளநீர் காவடி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கோவில் விழாக்குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.