பதிவு செய்த நாள்
13
ஆக
2024
03:08
புனர்பூசம் 4 ம் பாதம்: மனதில் தெளிவுடன் செயல்பட்டு வெற்றி காணும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்டகரமான மாதம். நட்சத்திர நாதனுடன் குரு, செவ்வாய் இணைந்திருப்பதால் எதிர்பார்ப்பு நூறு சதவிகிதம் நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடை அகலும், லாபம் அதிகரிக்கும். வேலையாட்களுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். உங்கள் தைரியம் மேலோங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் கவலை நீங்கும். திருமண வயதினருக்கு தகுந்த வரன் வரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு, இடமாற்றம் போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு உண்டாகும். அடைபடாமல் இருந்த கடன்கள் அடையும். வீண் செலவுகளில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்பத்தில் நம்பிக்கை அதிகரிக்கும். முயற்சி வெற்றியாகும். உடல்நலனில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சகோதரர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகள் மீது கவனம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும்.
சந்திராஷ்டமம்: ஆக. 20. செப்.16.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,29,30. செப். 2,3,11,12.
பரிகாரம் நவக்கிரக குரு பகவானை வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.
பூசம்: முயற்சிகளில் வெற்றியடைவது மட்டுமே லட்சியமாக கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் உங்களுக்கு திருப்பு முனையான மாதம். கேதுவால் உங்கள் சுய திறன் வெளிப்படும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சமூகம் உங்களை உணரும். குரு, சுக்கிரனால் இதுவரை இருந்த நெருக்கடி இல்லாமல் போகும். தொழில், உத்தியோகம் போன்றவற்றில் இருந்த தடை விலகி லாபம் உண்டாகும். குலதெய்வ அருளால் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். நீங்கள் யார் என்பதை நிரூபிப்பீர்கள். குரு மங்கள யோகத்தால் வருமானம் பல வழியில் வரும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர் விருப்பம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் செல்வாக்கு உயரும். வேலை வாய்ப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகி ஒற்றுமை அதிகரிக்கும். பெண்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்படும் மாங்கல்ய ஸ்தானாதிபதி வக்கிரம் அடைந்திருப்பதால் கணவருக்கிருந்த பாதிப்பு நீங்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். குரு பார்வையால் புதிய நட்பும். திருமண வயதினருக்கு பொருத்தமான வரனும் அமையும். சொத்து சேர்க்கை உண்டாகும். அரசியல் வாதிகளுக்கு பொறுப்பு தேடிவரும். மாணவர்கள் ஆசிரியர்கள் வழிகாட்டுதலை ஏற்பது நல்லது.
சந்திராஷ்டமம்: ஆக. 20,21. செப்.16.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,26,29. செப். 2,8,11.
பரிகாரம் சனீஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
ஆயில்யம்: மெல்ல மெல்ல வாழ்வில் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதம். மாதம் முழுவதும் குரு, சுக்கிரனின் சஞ்சார நிலைகளும் உங்கள் விருப்பம் நிறைவேறும். கேது உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த முயற்சி இப்போது நடந்தேறும். வரவேண்டிய பணம் உங்களைத் தேடிவரும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிறிய முதலீட்டிலும் பெரிய லாபம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய இடம், வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடம் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். சமூகத்தில் அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தைகள் குறித்த கவலை நீங்கும். ஒரு சிலருக்கு குழந்தை பேறு உண்டாகும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கூட்டுத்தொழிலில் ஆதாயம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வரும். தீராமல் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஆக.21.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 20,23,29. செப். 2,5,11,14.
பரிகாரம்: பெருமாளை வழிபட வாழ்க்கை வளமாகும்.