பதிவு செய்த நாள்
13
ஆக
2024
03:08
மகம்: ஆத்ம பலம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதம். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குழப்பம், வரவில் தடை, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை உண்டாகும். குரு பகவானின் பார்வையால் மாற்றம் ஏற்படும். உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும். தாய்வழி உறவுகளின் ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த சந்தோஷம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் தோன்றும். போட்டியாளர்கள் பாதையிலிருந்து விலகுவர். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். சூரியனால் தைரியமாக செயல்படத் தொடங்குவீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். உங்களை அலட்சியமாக பார்த்தவர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். ஆக செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சங்கடம் விலக ஆரம்பிக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும் என்றாலும், அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் ஆசைக்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது அவசியம். விவசாயிகளுக்கு விளைச்சலில் லாபம் ஏற்படும். மாணவர்கள் மாதத்தின் முற்பகுதியில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்:ஆக.22.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 19,25,28. செப். 1,7,10,16.
பரிகாரம்: விநாயகர் வழிபாட்டால் சங்கடம் நீங்கும்.
பூரம்: நினைப்பதை சாதிக்கும் திறமை கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம். சுக்கிரன் மாதம் முழுவதும் ஜென்ம ராசிக்குள்ளும், தொடர்ந்து தன ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த நன்மையை அடைவீர். சமூகத்தின் பார்வைக்கு செல்வாக்கு மிக்கவராக தோன்றுவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி காணாமல் போகும். பண வரவு திருப்தி தரும். விருப்பம் எளிதாக நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய சொத்து, வாகனம் சேரும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவினால் உத்தியோகத்தில் பாதுகாப்பு கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகி ஒற்றுமை ஏற்படும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம், உணவகங்கள், செங்கல் வியாபாரம் லாபம் தரும். ராகு அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் சட்டத்திற்கு உட்பட்டு நேர்மையாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவதால் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதமாக கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது எதிர்காலத்தில் சிறந்த முன்னேற்றத்தை தரும்.
சந்திராஷ்டமம்: ஆக. 23.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 19,24,28. செப். 6,10,15.
பரிகாரம்: ரங்கநாதரை வழிபட வளம் உண்டாகும்.
உத்திரம் 1 ம் பாதம்: எதிலும் முதலிடம் வகிக்கும் ஆற்றல் மிக்கவராக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ராசிநாதன் ராசிக்குள்ளாகவே சஞ்சரிப்பதால் எல்லாவற்றிலும் வேகம் இருக்கும். அதிரடியாக செயல்படுவீர்கள். உங்கள் பலம் மற்றவர்களுக்கு தெரிய வரும். அதே நேரத்தில் உங்கள் அவசரச் செயல்கள் உங்களுக்கே சங்கடத்தையும் ஏற்படுத்தும். சுக்கிரனால் பொருளாதார நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். தடைப்பட்டிருந்த வேலைகள் நடக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாயால் பிரபலங்களால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். குடும்ப, சுக, சத்ரு ஸ்தானங்களுக்கு குருவின் பார்வை உண்டாவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். பணவரவு சந்தோஷத்தை ஏற்படுத்தும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். ஒரு சிலர் தலைமையின் பாராட்டிற்கு ஆளாவீர். விவசாயத்தில் லாபம் தோன்றும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஆக. 23.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 28. செப். 1,10.
பரிகாரம்: நவக்கிரகத்திற்கு தீபமேற்றி வழிபட நன்மை அதிகரிக்கும்.