பதிவு செய்த நாள்
13
ஆக
2024
03:08
உத்திரம் 2,3,4 ம் பாதம்: சாதுரியமாக செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம். ராசிநாதனால் அறிவாற்றல் வெளிப்படும். தடைப்பட்ட வேலை நடந்தேறும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சொத்து வாங்கும் கனவு நனவாகும். குரு பகவான் ராசியை பார்ப்பதால் செல்வாக்கு உயரும். தொழில், உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். உடல்நிலையில் இருந்த சங்கடம் விலக ஆரம்பிக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். குலதெய்வ அருள் உண்டாகும். குழந்தைக்கான ஏக்கம் தீரும் நாள் வெகுதொலைவில் இல்லை. பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விரய ஸ்தானாதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் அரசு ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சுக்கிரன் சஞ்சாரம் மாதம் முழுவதும் இருப்பதால் பொன் பொருள் சேரும். செயல்களில் வெற்றி உண்டாகும். ராகுவால் நட்பு வட்டம் விரிவடையும். ஒரு சிலர் எதிர்பாலினரின் வலையில் சிக்க நேரும். அதனால் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம். விவசாயிகள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: ஆக. 24.
அதிர்ஷ்ட நாள்: ஆக.19,23,28. செப்.1,5,10,14.
பரிகாரம்: சக்தி வழிபாட்டால் சங்கடம் விலகும்.
அஸ்தம்: புத்தி சாதுரியத்துடன் செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் சிறப்பான மாதம். இருக்கும். குரு, செவ்வாயும் இணைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பெரியோரின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும். வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்று வருவீர்கள். வரவேண்டிய பணம் வரும். புதிய சொத்தும் ஒரு சிலருக்கு சேரும். காவல், ராணுவம், பேரிடர் துறைகளில் பணிபுரிவோருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த மாறுதல் ஏற்படும். செய்துவரும் தொழிலால் வெளியூருக்கு பயணம் ஏற்படும். வசதி வாய்ப்பும், செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சுக்கிரனால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். பொன் பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். விரய ஸ்தான சூரியன் செலவுகளை அதிகப்படுத்துவார். ஒருசிலருக்கு போலி தயாரிப்புகளை விற்பனைச் செய்வதால் சங்கடம் உண்டாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். ராகுவால் வெளிநாட்டு முயற்சி லாபத்தை ஏற்படுத்தும். செய்து வரும் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். விவசாயம் செழிப்படையும். மாணவர்கள் ஆசிரியர்கள் ஆலோசனையை ஏற்பது நல்லது.
சந்திராஷ்டமம்: ஆக. 24.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 20,23,29. செப். 2,5,11,14.
பரிகாரம்: பிரதோஷம் அன்று நந்தியை வழிபட வளம் கூடும்.
சித்திரை 1, 2 ம் பாதம்: தைரியம், துணிச்சலுடன் வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நினைப்பது நிறைவேறும். செவ்வாய் குருவுடன் இணைவதால் சங்கடம் விலக ஆரம்பிக்கும். எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக பூர்த்தியாகும். சமூகத்தில் அந்தஸ்து செல்வாக்கும் உயரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். உடல்நிலை சீராகும். உற்சாகமுடன் செயல்படுவீர். சுக்கிரன் சஞ்சார நிலைகள் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் பல வழியிலும் லாபம் கூடும். வராமல் இருந்த பணம் வரும். தம்பதிகளுக்குள் இணக்கம் உண்டாகும். சூரியன் விரய ஸ்தானத்தில் மறைவதால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். வழக்கமான வேலைகளிலும் உங்கள் கவனம் சிதறும். சுய தொழில் செய்து வருபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்னைகளில் தலையிடுவதும் பஞ்சாயத்து செய்வதும் சிக்கலை அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி தள்ளிப்போகும். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்பவர்கள் ஏஜண்டுகள் விஷயத்தில் கவனம் தேவை. எதிலும் அவசரம் வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஆக. 25.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 18,23,27. செப். 5,9,14.
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வழிபட வளம் உண்டாகும்.