பதிவு செய்த நாள்
13
ஆக
2024
03:08
சித்திரை 3,4 ம் பாதம்: சாதனை புரிவதில் வல்லவரான உங்களுக்கு பிறக்கும் ஆவணி மாதம் நன்மையான மாதம். லாபாதிபதி சூரியனால் செல்வாக்கு வெளிச்சத்திற்கு வரும். அரசு வழியில் தடைப்பட்ட வேலை நடக்கும். ஒப்பந்ததாரர்களுக்கு வரவேண்டிய பணம் வரும். தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வியாரத்தில் இருந்த தடை விலகும். வேலைத்தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஒருசிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக விற்க முடியாமல் இருந்த இடம் விற்பனையாகும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பணவரவில் ஏற்பட்ட தடை நீங்கும். தாய்வழி உறவுகளால் லாபம் அதிகரிக்கும். ராகுவால் உடல்நிலையில் ஆரோக்கியம் உண்டாக்கும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச்செல்வர். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வதின் வழியாக நன்மை கூடும். விவசாயிகள் விளைச்சலில் கூடுதல் கவனம் செலுத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 26.
அதிர்ஷ்ட நாள்: ஆக.18,24,27. செப். 6,9,15.
பரிகாரம்: அம்மனை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.
சுவாதி: யோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்ட மான மாதம். நட்சத்திரநாதனும், சூரியனும் நன்மை செய்ய காத்திருக்கிறார்கள். இதுவரை இருந்த நெருக்கடி இனி இல்லாமல் போகும். ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து பாதிப்பை சந்தித்து வந்த உங்களுக்கு இனி அதிலிருந்து மாற்றம் ஏற்படும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். தேங்கியிருந்த பொருட்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வெளிநாட்டு முயற்சியில் வெற்றி ஏற்படும். அரசியல்வாதிகள் நிலை உயரும். எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் முன்னேற்றம் அதிகரிக்கும். வருவாய் கூடும். புதிய பொருட்கள் சேரும். குருவின் பார்வை குடும்பத்தில் சந்தோஷ நிலை ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை விலகி இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய இடம், வீடு என்று ஒரு சிலருக்கு சேரும். விவசாயிகள் எதிர்பாராத நெருக்கடியை சந்திக்க நேரும். மாணவர்களுக்கு மாதம் முழுவதும் படிப்பில் கவனம் தேவை. ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்கும் மாணவர்கள் முன்னேற்றத்தை நோக்கி நகருவார்கள்.
சந்திராஷ்டமம்: ஆக. 26,27.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 22,24, செப். 4,6,13,15.
பரிகாரம்: வராகியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதம்: விருப்பப்பட்ட வாழ்வை வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றமான மாதம். ராகு, சூரியன், சுக்கிரன், புதன், குருவின் பார்வைகளால் உங்கள் வாழ்க்கையை வளமாகும். இதுவரை இருந்த நெருக்கடி ஒவ்வொன்றாக விலகும். அரசு வழி முயற்சி எளிதாக நடந்தேறும். சட்ட சிக்கல்கள் விலகும். ஒரு சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். மேலைநாட்டு தொடர்பு லாபத்தை உண்டாக்கும். தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். செயலில் திட்டமிட்டு லாபம் காண்பீர். புதிய பொருள் சேரும். ஒரு சிலர் புதிய வாகனம் வாங்குவீர். புதிய இடம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர். தாய்வழி உறவுகள் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். அலுவலகப் பணியில் உயர்வு உண்டாகும். புதிய தொழில் தொடங்க முயற்சித்தவர் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அடிமட்ட பணியாளர், சிறு வியாபாரிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 27.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,24,30. செப்.3,12,15.
பரிகாரம்: நவகிரகத்தில் உள்ள குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.