பதிவு செய்த நாள்
13
ஆக
2024
03:08
விசாகம் 4 ம் பாதம்: சூழ்நிலையை அறிந்து அதற்கேற்ப வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதத்தை அதிஷ்டம் நிறைந்த மாதம். குருவுடன் உங்கள் ராசிநாதன் ஆக 26 வரை இணைந்து சஞ்சரிப்பதால் இதுவரையில் உங்களுக்கிருந்த சங்கடம் விலகும். வாழ்க்கையில் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைவீர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். திருமண வயதினருக்கு வரன்வரும். சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். லாபம் பலவழியிலும் உண்டாகும். உத்தியோகம், தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டிருப்போரின் விருப்பம் பூர்த்தியாகும். செல்வமும் செல்வாக்கும் தோன்றும். எதிர்காலத்திற்குரிய பாதைத்தெரியும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். செய்துவரும் தொழில் முன்னேற்றமடையும். பார்த்து வரும் வேலையில் உயர்வு தோன்றும். கணவருடன் இணக்கமான நிலை ஏற்படும். சகோதரர்கள் ஒத்துழைப்புடன் சில வேலைகளில் லாபம் உண்டாகும். மாணவர்களுக்கு மாதத்தின் முற்பகுதியில் படிப்பில் கவனம் சிதறினாலும் பிற்பகுதியில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக.28.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 18,21,27,30. செப். 3,9,12.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை வழிபட வளம் உண்டாகும்.
அனுஷம்: எதிலும் நீதி, நியாயம் பார்த்து வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் விருப்பங்கள் நிறைவேறும் மாதம். உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கி வந்த நட்சத்திர நாதன் சனி வக்கிரமடைந்திருப்பதால் சங்கடம் விலக ஆரம்பிக்கும். உடல்நிலை சீராகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் சந்தோஷத்திற்கு ஏற்பட்ட தடை விலகும். குருவின் பார்வை ராசிக்கு நேரடியாக உண்டாவதால் செல்வாக்கு உயரும். பொருளாதார நிலை உயரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். கேது சஞ்சரிப்பதுடன் குருவின் பார்வையும் கிடைப்பதால் வருமானம் உயரும். ஆன்மிகவாதிகள் செல்வாக்கினை அடைவர். வெளிநாட்டுத் தொடர்புகள் ஆதாயத்தை வழங்கும். விவாகரத்து பெற்றவர்களுக்கும் துணையை இழந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய முயற்சி வெற்றியாகும். ஜீவன ஸ்தானத்தில் சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் வேலைக்காக மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வரும். வித்யாகாரகன் புதனால் மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். ராசிநாதன் ஆக 27 முதல் மறைவு பெறுவதால் விவசாயிகள் விளைச்சலில் கவனம் செலுத்துவது நல்லது. காவல்துறை, ராணுவம், மீட்பு பணிகளில் ஈடுபட்டிருப்போர் பணிகளில் விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
சந்திராஷ்டமம்: ஆக.28,29.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 17,18,26,27. செப். 8,9.
பரிகாரம்: குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.
கேட்டை: ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் விஜய வெற்றிக்கான மாதம். உங்கள் ராசிநாதனுடன் குருவுடன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும். சிறிய முயற்சியிலும் பெரியலாபம் கிடைக்கும். வாழ்க்கையில் இருந்த சங்கடமெல்லாம் விலகும். சந்தோஷம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த புதியபாதை தெரியும். தம்பதியரிடையே இருந்த சங்கடம் விலகும். ஒரு சிலருக்கு திருமணம் நடக்கும். செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் மறைந்தாலும் குரு வழங்கும் யோகப் பலன் தொடரும். உங்கள் ஜீவனாதிபதி ஆட்சியாக சஞ்சரிப்பதால் தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலைத் தேடியவர்களுக்கு தகுதிக்குரிய வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். மாதத்தின் முற்பகுதியில் சுக்கிரனால் நன்மைகளை வழங்க முடியாமல் போனாலும் ஆக 26 முதல் கனவு நனவாகும். பொன் பொருள் சேரும். புத பகவானின் சஞ்சார நிலை மாதம் முழுவதும் சாதகமாக இருப்பதால் கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 29,30.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 18,23,27. செப். 5,9,14.
பரிகாரம்: பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.