பதிவு செய்த நாள்
13
ஆக
2024
03:08
மூலம்: பிறருக்கு நல்வழி காட்டும் மனம் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் அதிர்ஷ்டமான மாதம். பாக்கிய ஸ்தானத்திற்கு சூரியன் பெயர்ச்சியாகி ஆட்சி பெறுவதால் கடந்த மாத நெருக்கடி காணாமல் போகும். பெரியோரின் ஆதரவும் தெய்வ அனுகூலமும் உண்டாகும். கேது, கேந்திர பலம் பெற்று ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதுடன் ஒரு சிலருக்கு புதிய பொறுப்பும் வரும். தன, குடும்ப ஸ்தானத்திற்கு குருவின் 9 ம் பார்வை பார்வை உண்டாவதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஆக. 26 வரை குருவுடன் இணைந்து சஞ்சரிப்பதால் நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வழக்கு விவகாரம் சாதகமாகும். உடலை வாட்டிக் கொண்டிருக்கும் நோய் விலகும். நம்பிக்கையோடு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய சொத்து சேரும் மாணவர்கள் படிப்பில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஆக. 30,31.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,25,30. செப். 3,7,12,16.
பரிகாரம்: காளத்தீஸ்வரரை எண்ணி வழிபட நன்மை உண்டாகும்.
பூராடம்: உலக அறிவும், அதிர்ஷ்ட வாய்ப்புகளும் பெற்று வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதம். நட்சத்திர நாதன் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு நிறைவேறும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். 6 ம் இடத்தில் உங்கள் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் குருவுடன் இணைந்து ஆக.26 வரை சஞ்சரிப்பதால் குரு மங்கள யோகம் உண்டாகி உங்கள் நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு குறையும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். குடும்பத்தில் சுப செயல் நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். ஆக. 27 முதல் குருவின் பார்வைகள் தொடர்ந்து உங்கள் நிலையைப் பாதுகாக்கும். குடும்பத்தில் ஒற்றுமையை உண்டாக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமையை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவை வழங்கும். செய்துவரும் தொழில் லாபத்தை ஏற்படுத்தும். பார்த்து வரும் உத்தியோகத்தில் விரும்பிய மாற்றம் உண்டாக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டியதாக இருக்கும்.
சந்திராஷ்டமம்: ஆக. 31. செப். 1.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 21,24,30. செப். 3,6,12,15.
பரிகாரம்: ஹயக்ரீவரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திராடம் 1 ம் பாதம்: புத்தி சாதுரியமும் கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் நன்மைகள் நிறைந்த மாதம். சூரியன் அஷ்டம ஸ்தானத்தை விட்டு பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கடந்த மாதத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். திறமை வெளிப்படும். எதிர்பார்ப்புடன் மேற்கொள்ளும் வேலைகளில் லாபம் உண்டாகும். அரசு வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். விஐபிகள் தொடர்பும் தெய்வ அருளும் உங்கள் நிலையை உயர்த்தும். செவ்வாயும், சுக்கிரனும் உங்கள் நிலையில் உயர்வை ஏற்படுத்தும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் பலம் இழந்து பின் வாங்குவர். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர் விலகிச் செல்வர். வழக்கு விவகாரம் சாதகமாகும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். தைரியமும் துணிச்சலும் உண்டாகி நினைத்ததை சாதிப்பீர். உங்கள் ராசிநாதன் குருவின் பார்வைகளால் தொழில், உத்தியோகம், வியாபாரம் போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலர் புதிய சொத்து, வாகனம் என்று வாங்குவீர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும். எத்தனைப் பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து உங்களால் விடுபட முடியும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு வரும். விவசாயிகளுக்கு ஆதாயம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தோன்றும்.
சந்திராஷ்டமம்: செப். 1.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 19,21,28,30. செப். 3,10,12.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வதால் சங்கடம் விலகும்.