தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2024 12:08
சிவகங்கை; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த சில வருடங்களாக திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து கடந்த 19ம் தேதி யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியது. இதனை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற யாகசாலை பூஜையில் 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை 5:30 மணிக்கு முக்கிய பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 8:00 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி பூர்ணாகுதி நடைபெற்று கோயிலை சுற்றி ஊர்வலமாக வந்த சிவாச்சாரியார்கள் ராஜகோபுரத்திற்கும் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் விழா கமிட்டி நிர்வாகிகள் தாயமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி செய்தனர்.