சுயம்பு வாலை வாராஹி சித்தர் பீடத்தில் ஹிந்து முன்னனி மாநில தலைவர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2024 12:09
அவிநாசி; வஞ்சி பாளையத்தில் உள்ள ஸ்ரீ சுயம்பு வாலை வாராஹி சித்தர் பீடத்தில் ஹிந்து முன்னணி மாநில தலைவர் தரிசனம். அவிநாசி வட்டம், புதுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிபாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுயம்பு வாலை வாராஹி தெய்வீக சித்தர் பீடத்தில் நேற்று ஹிந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம், மாநில செயலாளர் செந்தில் ஆகியோர் தரிசனம் செய்தனர். பீடத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அன்னை ஸ்ரீ சுயம்பு வாழை வாராஹி அம்மனின் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர். பின்னர் புதிதாக கட்டப்பட்டு வரும் வாராகி ஆலயத்தை பார்வையிட்டு மக்கள் அனைவரும் திருப்பணியில் பங்கு பெற வேண்டும் என ஹிந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் வேண்டுகோள் விடுத்தார். இந்நிகழ்ச்சியில் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.