பதிவு செய்த நாள்
10
செப்
2024
12:09
கோவை; கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை மற்றும் புலம் இலக்கிய பலகை சார்பில், கம்பர் இலக்கிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த புலம் தமிழ் இலக்கியப் பலகையின் அமைப்பாளர் ரவீந்திரன் பேசியதாவது: சங்க இலக்கியங்களுக்கு பின் தோன்றிய காப்பியங்களில், தலை சிறந்தாக விளங்குவது ராமாயணம். இந்த இதிகாசத்தை படைக்க, கம்பர் பத்தாயிரம் பாடல்களை எழுதியிருக்கிறார். இன்றைக்கு பல மொழி இலக்கிய படைப்புகள், மொழி பெயர்க்கப்பட்டு, தமிழுக்கு வளம் சேர்க்கப்பட்டுள்ளன.ஆனால் பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே, வடமொழியில் இருந்து ராமாயணத்தை தமிழுக்கு மொழி பெயர்த்து, கம்பர் தமிழுக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.கம்பராமாயணம் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் என்று சொல்ல வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். கல்லுாரியின் செயலர் வாசுகி, கம்பன் ஆய்வாளர் வரதராஜன், பேராசிரியர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.